பரிசல்
Jump to navigation
Jump to search
பரிசல் என்பது அதிக ஆழம் இல்லாத நீரில் செலுத்தும் வட்ட வடிவ படகு போன்ற கலம். இது பெரும்பாலும் மூங்கிலால் வேயப்பட்டு, எருமைத் தோலால் போர்த்தப்பட்ட கலம் ஆகும். இதனை செலுத்த பரிசற்காரர் ஒரு நீண்ட கழியை (கொம்பை), வைத்து உந்தி நகர்த்துவர். பரிசல் பெரும்பாலும் அதிக விரைவில் நீரோடாத ஆறுகளிலும் அமைதியாய் உள்ள நீர்நிலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்பொழுது இதன் பயன்பாடு அருகி வருகிறது. பரிசல் ஓட்டிகள் சங்கம் தமிழ்நாட்டில் 2014ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. [1]
தமிழகத்தில் பரிசல் பயன்படும் இடங்கள்[தொகு]
படங்கள்[தொகு]
துங்கபத்திரா ஆற்றில் ஒரு பரிசல்
பரிசல் பழுது பார்த்தல்
தொடர்புடைய இணைப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://www.dinamani.com/edition_dharmapuri/dharmapuri/2014/09/29/பரிசல்-ஓட்டிகள்-சங்கம்-தொடக/article2454530.ece