சேர்வராயன் மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1860 களில் சேர்வராயன் மலைப்பகுதிகளில் எடுக்கப்பட்ட இரு ஆண் மற்றும் பெண் மலையாளிகள் (மலைவாழ் பழங்குடிமக்கள்)

சேர்வராயன் மலைப் பகுதி தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்திற்கு அருகில் காணப்படும் மலைத்தொடர்ச்சியாகும். இது மலைத்தொடர்ச்சியிலிருந்து விலகி தனக்கென 400 ச. கி.மீ. பகுதியை ஆக்கிரமித்துள்ளது. வானியர் என்னும் பள்ளத்தாக்கு கிழக்கு மற்றும் மேற்கு மலைகளாக இவற்றைப் பகுக்கின்றன. இது 4000 - 5000 அடி கடல்மட்டத்தை விட உயரம் கூடுதலாகும். இந்த மலையில் இயற்கையின் ஊற்றாக நிறைய மரங்களும், மூலிகைச் செடிகளும், வன விலங்குகளும் இருக்கின்றன. மலையாட்கள் (மலையாளிகள் - மலை வாழ் பழங்குடிமக்கள்) மற்றும் வெள்ளாளர்கள் மிகுந்துக் காணப்படுகிறார்கள்.[1]. இம்மலையில் காப்பி(Coffee) என அழைக்கப்படும் வணிகப்பயிரும் விளைவிக்கப் படுகிறது. இதனுள் காணப்படும் ஏற்காடு மலைப் புகழ்பெற்ற சுற்றுலா மையமாகும்.

இது பண்டுக்காலத்தில் சேர மன்னன் நிலமாகவும் அவன் ஆண்ட நிலப்பகுதியாகவும் இருந்திருக்கக்கூடும். இதிலிருந்தே சேர்வராயன் என்றப் பெயர் மருவியிருக்கக் கூடும் என சொல்லப்படுகிறது.

மேற்கோள்[தொகு]

  1. Wilson Hunter, Sir William; Sutherland Cotton, James; Sir Richard Burn, Sir William Stevenson Meyer. Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேர்வராயன்_மலை&oldid=2160305" இருந்து மீள்விக்கப்பட்டது