மீன்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீன்கொத்தி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கோராசீபோர்மெஸ்
துணைவரிசை: Alcedines
Families

Alcedinidae
Halcyonidae
Cerylidae

உலகில் மீன்கொத்தி காணப்படும் இடங்கள்

மீன்கொத்தி (Kingfishers) உலகமெங்கும் பரவலாகக் காணப்படும் ஒரு பறவையினமாகும். ஏறத்தாழ 90 வகையான மீன்கொத்தி இனங்கள் உலகில் உள்ளன. இவை பெரிய தலைகளும் நீண்ட கூரிய அலகுகளும் குட்டைக் கால்களும் சிறு வால்களும் கொண்டவையாகும். எடுப்பான நிறங்கள் கொண்ட இம் மீன்கொத்தி இனங்களின் வகைப்பாட்டில் மூன்று குடும்பங்கள் உள்ளனன. அவையாவன, ஆற்று மீன்கொத்திகள் எனப்படும் ஆல்சிடினிடீ (Alcedinidae), மர மீன்கொத்தி எனப்படும் ஆல்க்கியோனிடீ (Halcyonidae), நீர் மீன்கொத்தி எனப்படும் செரிலிடீ (Cerylidae).

நீர்நிலையருகில் வாழும் மீன்கொத்திகள் சுழியோடி சிறு மீன்களைப் பிடித்து உண்கின்றன. தவளைகள், பூச்சிகளையும் உண்கின்றன. இவற்றின் கண்கள் நீருள்ளும் வெளியேயும் பார்க்கக் கூடியதான முட்டைவடிவ வில்லையைக் கொண்டுள்ளன. மர மீன்கொத்திகள் ஊர்வனவற்றைப் பிடித்துண்கின்றன. எல்லா வகையான மீன்கொத்திகளும் தாம் பிடித்த இரையை மரத்தில் அடித்தோ கல்லில் வீழ்த்தியோ கொன்று உண்கின்றன.

மத்திய பிரதேசத்தில் காணப்படும் மீன்கொத்தி பறவை

பரவலும் வாழிடமும்[தொகு]

கனடாவிலும் அமெரிக்காவின் வட பகுதிகளிலும் பரவலாகக் காணப்படும் வெண்பட்டை மீன்கொத்தி. இதன் அறிவியல் பெயர் மெகாசெரில் ஆல்கியான் (Megaceryle alcyon). படத்தில் உள்ளது பெண் பறவை. ஆண்பறவைக்கு கழுத்துக்குக் கீழே வயிற்றுப்புறத்தில் சிவப்பாக இருக்கும்

மீன்கொத்திகள் உலகில் புவிமுனைப் பகுதிகள், மிக வறண்ட சில பாலைவனங்களைத் தவிர ஏறக்குறைய மற்ற எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. சில இனங்கள் பசிபிக் பெருங்கடலின் தெற்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள தீவுகளிலும் காணப்படுகின்றன. ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவில் மெக்சிக்கோவிற்கு வடக்கிலும் சிறிய எண்ணிக்கையிலான மீன்கொத்தி இனங்களே காணப்படுகின்றன.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீன்கொத்தி&oldid=3224929" இலிருந்து மீள்விக்கப்பட்டது