உள்ளடக்கத்துக்குச் செல்

வேளச்சேரி ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேளச்சேரி ஏரி (Velachery Lake) என்பது சென்னையில் உள்ள வேளச்சேரி பகுதியில் அமைந்துள்ள ஓர் ஏரி. இது ஒரு தாழ்ந்த நிலப்பகுதியாதலால் சுற்றுப்பகுதிகளில் மழைநீர் சென்று இங்கு ஆண்டு முழுவதும் நீர் உள்ளது. கழிவுகள் மற்றும் களைச்செடிகளால் ஏரி மாசுபடும் நிலையில் காணப்படுகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகளின் வளர்ச்சியின் விரைவான வேகத்தின் விளைவாக தென்சென்னையில் அமைந்துள்ள வேளச்சேரி ஏரி 265 ஏக்கரில் இருந்து 55 ஏக்கராக சுருங்கியது.[1] விரைவான நகரமயமாக்கலால் இந்த ஏரி பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தது. நீரின் தன்மை பாதிப்படைந்த்து, சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு 53 ஏக்கரும், தமிழ்நாடு குடிசைப்பகுதி ஒழிப்பு வாரியத்திற்கு 34 ஏக்கரும் வீட்டு வசதிக்காக அரசு ஒதுக்கீடு செய்தது. காந்தி நகர் ஏரிக்கரை தெருவில் கழிவுநீர் இணைப்புகள் இல்லாத ஆக்கிரமிப்பாளர்கள் ஏரியை மாசுபடுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது.

ஏரியின் அருகேயுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலையை மேம்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வேளச்சேரி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஜெகநாதபுரம், சசிநகர், லட்சுமிநகரில் அமைந்துள்ள 955 வீடுகளை அகற்ற தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் முன்னெடுப்புகளையும் தொடங்கினர்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lakshmi, K. (2024-12-17). "After many years, Velachery lake sports a cleaner look and attracts birds". The Hindu (in Indian English). Retrieved 2025-02-19.
  2. "சென்னை வேளச்சேரி ஏரி பகுதியில் 955 வீடுகளை அகற்ற கணக்கெடுக்கும் பணி தீவிரம்: பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டம்". Hindu Tamil Thisai. 2024-11-26. Retrieved 2025-02-19.
  3. "வேளச்சேரி ஏரி அருகே உள்ள வீடுகள் அகற்ற கணக்கெடுப்பு: பொதுமக்கள் போராட்டம்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2024/Nov/25/survey-to-demolish-houses-near-velachery-lake-public-protest. பார்த்த நாள்: 19 February 2025. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளச்சேரி_ஏரி&oldid=4211384" இலிருந்து மீள்விக்கப்பட்டது