பூண்டி ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூண்டி ஏரி
அமைவிடம்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு - 602001
ஆள்கூறுகள்13°10′54″N 79°51′27″E / 13.1818°N 79.8575°E / 13.1818; 79.8575
வகைநீர்த்தேக்கம்
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு121 ச.கி.மீ.
சராசரி ஆழம்35 அடி
நீர்க் கனவளவு3,231 மில்லியன் கன அடி
கடல்மட்டத்திலிருந்து உயரம்85 மீட்டர்
குடியேற்றங்கள்பூண்டி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை

பூண்டி ஏரி அல்லது சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் என்பது சென்னை நகர மக்களின், குடிநீர்த் தேவைக்காக, சென்னை மாநகராட்சி மேயராக இருந்த சத்தியமூர்த்தியின் முயற்சியால், 14 சூன் 1944ஆம் ஆண்டில், 65 இலட்சம் ரூபாய் செலவில் கட்டித் திறக்கப்பட்டது. இந்நீர்த்தேக்கம் சென்னையிலிருந்து, 60 கி.மீ., தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள, பூண்டி எனும் ஊரில் கொற்றலை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.

தெலுங்கு-கங்கைத் திட்டம்[தொகு]

ஆந்திர-தமிழ்நாடு அரசுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, 1983ஆம் ஆண்டு, தெலுங்கு கங்கைத் திட்டம் செயல்படுத்தப்பட்ட்து. அதன்படி ஆண்டுதோறும், 12 டி.எம்.சி., நீரை, தமிழகத்திற்கு, ஆந்திரா மாநிலம் வழங்க வேண்டும். ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திலிருந்து சோமசீலா, கண்டலேறு அணை வழியாக, 406 கி.மீ., தொலைவு திறந்தவெளி கால்வாயில் பயணித்து, கிருஷ்ணா நீர் தமிழகம் வந்தடைகிறது. பின்பு, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை, 'ஜீரோ பாயின்ட்' (Zero Point) என்ற இடத்திலிருந்து, பூண்டி ஏரிக்குத் தண்ணீரை எடுத்துச் செல்ல, 25 கி.மீ., துாரத்திற்குக் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது.[1]

சில குறிப்புகள்[தொகு]

  1. அணையின் உயரம் 35 அடி. அணையின் மொத்த கொள்ளளவு, 3,231 மில்லியன் கன அடி-பரப்பளவு 121 ச. கி. மீட்டர். [2]
  2. மழை, கிருஷ்ணா நீர் வரத்தால், அணை நிரம்பினால், பேபி கால்வாய், முதன்மைக் கால்வாய்களின் (Link Canals) மூலம், செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, புழல் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
  3. இதன் அருகே அமைந்துள்ள தொல்பழங்கால வைப்பகத்தில், ஒன்றரை லட்சம் ஆண்டுகள் பழமையான கற்களால் ஆன ஆயுதங்களும் முதுமக்கள் தாழியும் உள்ளன.
  4. இதன் அருகில் பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
  5. இந்த ஏரியை வெட்ட பத்து கிராமங்களில் இருந்த மக்களை வெளியேற்றி, வேறு இடங்களுக்குக் குடியமர்த்தினர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.dinamalar.com/district_detail.asp?id=1145018
  2. http://www.maalaimalar.com/2014/02/08124029/Increase-Krishna-water-The-wat.html[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூண்டி_ஏரி&oldid=3810265" இலிருந்து மீள்விக்கப்பட்டது