ஆழியாறு அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆழியாறு அணை
Aliyar Reservoir.JPG
அமைவிடம் கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள் 10°28′26″N 76°58′22″E / 10.4739°N 76.9728°E / 10.4739; 76.9728ஆள்கூற்று: 10°28′26″N 76°58′22″E / 10.4739°N 76.9728°E / 10.4739; 76.9728
வகை நீர்த்தேக்கம்
முதன்மை வரத்து ஆழியாறு
வடிநில நாடுகள் இந்தியா

ஆழியார் அணை தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள சிறு நீர்த்தேக்கமாகும். இங்கு மனமகிழ்விற்காக பூங்கா,மீன் காட்சியகம், தீம் பார்க் முதலியன தமிழ்நாடு மீன்வளத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

1962ஆம் ஆண்டு ஆழியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை கோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ளது. இதற்கு மேல் ஆழியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நவமலை மின்நிலையம் வழியேயும் பரம்பிக்குளம் அணையிலிருந்து கால்வாய் மூலமாகவும் நீர்வரத்து உள்ளது. அம்பரம்காளையம் தர்கா ஆழியாற்றின் கரையில் உள்ளது. மூன்று புறமும் மலைகள் சூழ்ந்த சூழல் மிகவும் மனதைக் கவர்வதாக உள்ளது. படகு சவாரியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.[1]

இந்த அணையின் அருகாமையில் சற்றே மலையேறினால் குரங்கு அருவி என்றழைக்கப்படும் சிறு அருவி சுற்றுலா மையத்தின் கவர்ச்சியைக் கூட்டுகிறது.இங்கு எடுக்கப்பட்டுள்ள தமிழ்த் திரைப்படங்கள் இவற்றின் பரவலான தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளன.

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Pollachi Dams
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆழியாறு_அணை&oldid=2223427" இருந்து மீள்விக்கப்பட்டது