கிருட்டிணகிரி அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிருட்டிணகிரி அணை
Krishnagiri Dam
கிருட்டிணகிரி அணை
அதிகாரபூர்வ பெயர்கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத் திட்ட அணை
நாடுஇந்தியா
அமைவிடம்கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று12°29′37.44″N 78°10′41.51″E / 12.4937333°N 78.1781972°E / 12.4937333; 78.1781972ஆள்கூறுகள்: 12°29′37.44″N 78°10′41.51″E / 12.4937333°N 78.1781972°E / 12.4937333; 78.1781972
நோக்கம்நீர்ப்பாசனம்
நிலைOperational
கட்டத் தொடங்கியது1955
திறந்தது1958
கட்ட ஆன செலவு₹15.9 மில்லியன்
அணையும் வழிகாலும்
வகைபுவிஈர்ப்பு
Impoundsதென்பெண்ணை ஆறு
உயரம் (foundation)29.26 m (96 ft)
நீளம்990.59 m (3,250 ft)
வழிகால்கள்8
வழிகால் வகைOGEE
வழிகால் அளவு4,061 m3/s (143,400 cu ft/s)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம்
மொத்தம் capacity68.2 MCM
வடி நிலம்5,428.43 km2 (2,095.93 sq mi)
கிருஷ்ணகிரி அணைப் பூங்கா

கிருட்டிணகிரி அணை, கிருட்டிணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும். இது கிருட்டிணகிரியிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.[1] இந்த அணை 1958இல் கட்டி முடிக்கப்பட்டு அப்போதைய தமிழக முதல்வரான காமராசரால் திறந்து வைக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 1666 மில்லியன் கன அடிகள்.[2] நீர்ப் பாசனம் பெறும் ஆயக்கட்டு பகுதியானது 3652 எக்டேர் நிலமாகும். [3]

பூங்கா[தொகு]

இந்த அணைப் பகுதியியில் அழகிய பூங்கா உள்ளது. அணையின் வலதுபுறம் 45 ஏக்கர் பரப்பளவிலும், இடதுபுறம் 15 ஏக்கர் பரப்பளவிலும் என மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், புல்வெளிப் பகுதிகள், நீரூற்றுகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு ஒரு மான் பண்ணையும் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.[4]

வரலாறு[தொகு]

கிருட்டிணகிரி பகுதியானது அவ்வப்போது கடும் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதியாக இருந்தது. தென்பெண்ணை ஆற்றின் கரையை ஒட்டியுள்ள விவசாயிகள் மட்டுமே ஆற்று நீரை ஏற்றம் முலம் எடுத்து தங்கள் வயல்களில் விவசாயம் செய்தனர். ஆனால் மற்ற விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர், இதனால் அப்போதைய காவேரிப்பட்டணம் சட்டமன்ற உறுப்பினரான சு. நாகராஜ மணியகாரர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணைகட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கை போதிய நிதி இல்லை என மறுக்கப்பட்டது. பின்னர் காமராசர் முதலமைச்சரான பிறகு அணை கட்ட சம்மதித்தார் என்றாலும் நிதிக்கு என்ன செய்வது என ராஜாஜியுடன் ஆலோசித்தபோது அவர் மத்திய அரசு வறட்சிக்காக நிதிவழங்கும் திட்டம் உள்ளது அந்த நிதியில் இருந்து அணையைக் கட்டலாம் என யோசனைத் தெரிவித்தார். அணை கட்டும்பணி 1955 சனவரி 3 இல் தொடங்கியது 1957 நவம்பர் 3 ஆம் தேதி பாசணத்துக்கு காமராசரால் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. [5]

குறிப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2008-03-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. http://www.wrd.tn.gov.in/Reservoir_details.pdf
  3. தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 479
  4. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு கிருஷ்ணகிரி அணை பூங்காவை மேம்படுத்தக் கோரிக்கை, எஸ். கே. ரமேஷ், இந்து தமிழ், 2020 சனவரி 14
  5. எஸ். கே. ரமேஷ் (திசம்பர் 7 2017). "வறட்சியால் உருவான அணை பராமரிப்பு இல்லாததால் பழுது". தி இந்து தமிழ். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருட்டிணகிரி_அணை&oldid=3265368" இருந்து மீள்விக்கப்பட்டது