செம்பரம்பாக்கம் ஏரி

ஆள்கூறுகள்: 13°00′42″N 80°03′38″E / 13.01158°N 80.06063°E / 13.01158; 80.06063
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பரம்பாக்கம் ஏரி
அமைவிடம்காஞ்சிபுரம் மாவட்டம், தென்னிந்தியா
ஆள்கூறுகள்13°00′42″N 80°03′38″E / 13.01158°N 80.06063°E / 13.01158; 80.06063
வகைநீர்த்தேக்கம்
முதன்மை வெளியேற்றம்அடையாறு
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு6,300 ஏக்கர்
சராசரி ஆழம்85.4 அடி
நீர்க் கனவளவு3,645 மில்லியன் கன அடி

செம்பரம்பாக்கம் ஏரி சென்னையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓர் ஏரியாகும். சென்னை நகரின் குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்படும் தலையாய ஏரிகளில் ஒன்றான இந்த ஏரியில் இருந்து அடையாறு நதி பிறக்கின்றது.

இந்த ஏரியானது 500 ஆண்டுகள் பழமையானது. இதன் அப்போதைய நீர்மட்டம் 19.5 அடியாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீர்மட்டம் 22 அடியாக உயர்த்தப்பட்டது. பின்னர் தெலுங்கு கங்கைத் திட்டத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் நீரைத் தேக்கி வைப்பதற்காக இதன் நீர்மட்டம் 24 அடியாக உயர்த்தப்பட்டது.

இந்த ஏரியின் கரை 9 கிலோ மீட்டர் நீளம் உடையது. ஏரியில் 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள், 2 கலங்கல் (ஆயிரம் அடி நீளத்தில் தானாக உபரிநீர் வெளியேறும் பகுதி) ஆகியவற்றைக் கொண்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் இதுதான் பெரிய ஏரி.[1] 85.4 அடி உயரமும், 6,300 ஏக்கர் பரப்பளவும் கொண்ட இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 364.5 கோடி கன அடி (3645 mcft), அதாவது, 3,645 மில்லியன் கன அடி ஆகும்.[2]

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பரம்பாக்கம்_ஏரி&oldid=3781146" இருந்து மீள்விக்கப்பட்டது