அண்ணா நகர் மேற்கு

ஆள்கூறுகள்: 13°05′37″N 80°11′55″E / 13.093500°N 80.1985°E / 13.093500; 80.1985
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்ணா நகர் மேற்கு
புறநகர்ப் பகுதி
அண்ணா நகர் மேற்கு is located in சென்னை
அண்ணா நகர் மேற்கு
அண்ணா நகர் மேற்கு
அண்ணா நகர் மேற்கு is located in தமிழ் நாடு
அண்ணா நகர் மேற்கு
அண்ணா நகர் மேற்கு
ஆள்கூறுகள்: 13°05′37″N 80°11′55″E / 13.093500°N 80.1985°E / 13.093500; 80.1985
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
புறநகர்சென்னை
அரசு
 • நிர்வாகம்பெருநகர சென்னை மாநகராட்சி
 • ஆளுநர்ஆர். என். ரவி[1]
 • முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்[2]
 • மாவட்ட ஆட்சியர்மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்600 040
வாகனப் பதிவுTN-02
மக்களவைத் தொகுதிமத்திய சென்னை
சட்டமன்றத் தொகுதிவில்லிவாக்கம்
திட்டமிடல் நிறுவனம்சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
இணையதளம்www.chennai.tn.nic.in

அண்ணா நகர் மேற்கு (ஆங்கிலம்: Anna Nagar West) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நகரமாகும். இது அண்ணா நகரின் மேற்குப் பகுதியாகும். இந்தப் பகுதியானது, சென்னை நகரத்திற்குள் ஒரு முக்கிய போக்குவரத்து மற்றும் குடியிருப்பு மையமாக செயல்படுகிறது. இந்த நகரம் மெட்ரோ ரயில் அமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. மில்லேனியம் பூங்கா இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய பூங்காவாகும். இங்கு மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்து நிலையம் உள்ளது.

வரலாறு[தொகு]

1968 ஆம் ஆண்டு சென்னைக்கு அருகிலுள்ள, அண்ணா நகர் மேற்கு ஒரு புறநகர் கிராமமாக இருந்தது.[3] பின்னர் இந்தக் கிராமம் குடியிருப்பு இடங்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அகலமான சாலைகள், பள்ளி மண்டலங்கள், ஒரு பேருந்து நிலையம் மற்றும் பெரிய பூங்காக்களுடன் திட்டமிடப்பட்டது. அண்ணா நகர் மேற்கின் எல்லைகளாக பூங்கா ரோடு, அண்ணா நகர் ஆறாவது அவென்யூ, உள்வட்ட சாலை, அம்பத்தூர் மெயின் ரோடு மற்றும் எம். டி. எச். சாலை ஆகியவை உள்ளன. 1990கள் மற்றும் 2000களில் இந்தப் பகுதி மகத்தான வளர்ச்சியைக் கண்டது. இப்போது பல அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் வசிக்கின்றனர். இது சென்னையில் ஒரு பிரதான குடியிருப்பு இடமாகக் கருதப்படுகிறது.[4]

அமைவிடம்[தொகு]

இது சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. பாடி, ஷெனாய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அரும்பாக்கம் மற்றும் கோயம்பேடு போன்ற பகுதிகள் அண்ணா நகர் மேற்கை சுற்றி அமைந்துள்ளன. அண்ணா நகரில் ஒரு தொடருந்து நிலையமும் அமைந்துள்ளது.

போக்குவரத்து[தொகு]

சாலை[தொகு]

அண்ணா நகர் மேற்கு பேருந்து நிலையம், உள் வட்டச் சாலையில் அமைந்துள்ளது. இது சென்னையின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகும், இது 1973 ஆம் ஆண்டில் பல்லவன் போக்குவரத்துக் கழகத்தால் (பி.டி.சி) கட்டப்பட்டது. இதன் குறியீடு "ANJ" ஆகும். இந்த நிலையத்தில் சுமார் 232 பேருந்துகள் உள்ளன, அவற்றில் 213 தினசரி பயன்படுத்தப்படுகின்றன. இந்த பேருந்து நிலையத்தை தினமும் சுமார் 50,000 பேர் பயன்படுத்துகின்றனர்.

தொடருந்து[தொகு]

அண்ணா நகரில் தொடருந்து நிலையம் 2003இல் திறக்கப்பட்டது. இது வில்லிவாக்கம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. 3.09 கிலோமீட்டர் (1.92 மைல்) தொடருந்து பாதை அண்ணா நகரை திருவள்ளூர் - சென்னை புறநகர் பாதையுடன் இணைக்கிறது. அண்ணா நகர் மேற்குக்கு அருகிலுள்ள சென்னை மெட்ரோ நிலையம், திருமங்கலம் மெட்ரோ நிலையம் ஆகும்.

2003 மற்றும் 2007 க்கு இடையில், ஐந்து புறநகர் தொடருந்துகள் அண்ணா நகரில் இருந்து வில்லிவாக்கம் வழியாக சென்னைக் கடற்கரைக்கு ஓடின. பாடி சந்திப்பு கட்டுமானத்திற்காக, இந்த நிலையம் 2007இல் மூடப்பட்டது. இருப்பினும், 2009 ஆம் ஆண்டில் சந்தி முடிந்தபின்னர், குறைந்த ஆதரவு காரணமாக நிலையம் மூடப்பட்டது.[5][6]

பள்ளிகள்[தொகு]

அண்ணா நகர் மேற்கு பகுதியில் காணப்படும் பாடசாலைகளில் சில:

 • SBOA மெட்ரிகுலேசன் மற்றும் மேல்நிலைப்பள்ளி, சென்னை
 • சி. எஸ். ஐ எவர்ட் மெட்ரிகுலேசன் மற்றும் மேல்நிலைப்பள்ளி, சென்னை
 • பிரிட்டிஷ் பள்ளி
 • லியோ மெட்ரிகுலேசன் மற்றும் மேல்நிலைப்பள்ளி
 • ஸ்ரீ கிருஷ்ணசாமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
 • வித்வத்வா சர்வதேச பள்ளி
 • மேரி கிளப்வாலா ஜாதவ் சிறப்பு உயர்நிலைப்பள்ளி
 • சின்மயா வித்யாலயா
 • கேந்திரிய வித்யாலயா
 • ஜெஸ்ஸி மோசஸ் பள்ளி

மருத்துவமனைகள்[தொகு]

அண்ணா நகர் மேற்கு பகுதியில் காணப்படும் மருத்துவமனைகளில் சில:

 • மெட்ராஸ் இயற்கை மருத்துவம் & சித்தா மருத்துவமனை
 • சில்கி லேசர் ஆராய்ச்சி நிறுவனம்
 • KKR ENT மருத்துவமனை
 • ஸ்ரீதேவி மருத்துவமனை
 • வீ கேர் மருத்துவமனை
 • போன் & ஜாயின்ட் மருத்துவமனை
 • சுந்தரம் மெடிக்கல் மருத்துவமனை

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
 3. "Muthusamy's Photo Stream: Chennai Anna Nagar Township Emerged from World Trade Fair 1968: Madras Week 2015 Photowalk Experience". Muthusamy's Photo Stream. 2015-08-24. பார்க்கப்பட்ட நாள் 2017-01-24.
 4. Breaking new ground: Anna Nagar, Kilpauk join elite club
 5. Ayyappan, V (18 February 2011). "Train service from Anna Nagar to resume". The Times Of India. http://timesofindia.indiatimes.com/city/chennai/Train-service-from-Anna-Nagar-to-resume/articleshow/7518360.cms. 
 6. Madhavan, T. (14 April 2013). "Padi and Anna Nagar wait for rail link". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/padi-and-anna-nagar-wait-for-rail-link/article4615682.ece. "https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணா_நகர்_மேற்கு&oldid=3749019" இலிருந்து மீள்விக்கப்பட்டது