ஜாஃபர்கான் பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜாஃபர்கான் பேட்டை (Jafferkhanpet) சென்னையின் தென்மேற்குப் பகுதியில் அடையார் ஆற்றினை அடுத்து அமைந்துள்ள ஓர் குடியிருப்புப் பகுதியாகும். அதன் அண்மையில் கிண்டி, கே கே நகர், அசோக் நகர், சைதாப்பேட்டை,ஈக்காடுதாங்கல் ஆகிய சுற்றுப்பகுதிகள் உள்ளன. கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து வடபழனி செல்லும் பிரிவு இங்கு இறங்குகிறது. அடையார் பாலத்தை அடுத்தமைந்துள்ள காசி சந்திப்பு குறிப்பிடத்தக்கதாகும். இங்கு காசி மற்றும் விஜயா திரையரங்குகள் உள்ளன. இதன் அருகில் உதயம் தியேட்டர் உள்ளது. காசி சிக்னல் அருகில் சென்னையில் மிக பிரபலமான ராஜம் & கம்பனி டிவி ஷோ ரூம் உள்ளது. சைவ உணவக குழு மமான சரவணபவன் உணவகம் இங்கு இயங்கி வருகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாஃபர்கான்_பேட்டை&oldid=3596481" இருந்து மீள்விக்கப்பட்டது