உள்ளடக்கத்துக்குச் செல்

மெட்ராசு இரப்பர் பேக்டரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Madras rubber factory
வகைபொது
நிறுவுகை1949
நிறுவனர்(கள்)கே.எம்.மாம்மென் மாப்பிள்ள
தலைமையகம்சென்னை, இந்தியா
முதன்மை நபர்கள்அருண் மாம்மென் (மேலாண் இயக்குனர்)
உற்பத்திகள்உருளிப்பட்டைகள், பொம்மைகள், விளையாட்டுச் சாதனங்கள்
வருமானம் 8080 கோடி (2010)
இயக்க வருமானம் 354 கோடி (2010)
நிகர வருமானம் 543 கோடி (2010)
உள்ளடக்கிய மாவட்டங்கள்ஃபன்ஸ்கூல், எம்ஆர்எஃப் பேசு பவுண்டேசன், எம்ஆர்எஃப் பந்தயவோட்டம்
இணையத்தளம்அலுவல்முறை இணையதளம்

பரவலாக எம்ஆர்எஃப் என அறியப்படும் மெட்ராசு இரப்பர் பேக்டரி, (Madras Rubber Factory) தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள ஒரு முதன்மையான உருளிப்பட்டை தயாரிப்பு நிறுவனமாகும். இதன் முதன்மைத் தயாரிப்பாக, தானுந்துகளுக்கான உருளிப்பட்டைகளைத் தயாரிப்பதாக இருப்பினும் ஆசுபுரோ என்றஅமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து ஃபன்ஸ்கூல் பொம்மைகளையும் தயாரித்து வருகிறது. இந்தியாவின் மிகப்பெரும் உருளிப்பட்டை தயாரிப்பாளராக விளங்கும் எம் ஆர் எஃப் உலகளவில் முதல் பன்னிரெண்டு மிகப்பெரும் உருளிப்பட்டை தயாரிப்பாளர்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நிறுவனம் 65 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அரக்கோணம், திருவொற்றியூர், பெரம்பலூர், பாண்டிச்சேரி, கோவா, கோட்டயம் மற்றும் மேடக்கில் தொழிற்சாலைகள் உள்ளன.[1][2][3]

1946ஆம் ஆண்டு கே.எம்.மாம்மென் மாபிள்ளையால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் 2008ஆம் ஆண்டில் 50 மில்லியன் மதிப்புடையதாக இருந்தது. உருளிப்பட்டைத் தயாரிப்புடன் பதமாகுமுன்பான உருளிப்பட்டை புதுப்பிப்பு சேவைகளை எம்ஆர்ஃப் பிரீட்ரீட்சு மூலமும், தூக்கிப்பட்டைகளை எம்ஆர்எஃப் மசில்பிளெக்சு மூலமும் விற்று வருகிறது. இதன் தலைவராக மறைந்த கே.எம்.மாம்மென் மாப்பிள்ளையின் மகன் வினூ மாம்மென் வழிகாட்டி வருகிறார்.

விளையாட்டுத் துறையில் துடுப்பாட்டத்திலும் சீருந்து பந்தய ஓட்டத்திலும் ஈடுபாடு கொண்டுள்ளது. துடுப்பாட்ட மேம்பாட்டிற்காக பல இந்திய துடுப்பாட்டாளர்களை புரப்பதுடன் எம்ஆர்எஃப் பேசு பவுண்டேசன் என்ற அமைப்பின் மூலம் விரைவுப்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளித்து ஊக்குவிக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "MRF Q4FY24 Results" (PDF). bseindia.com.
  2. "MRF:Overview". 14 February 2015.
  3. "Company Profile:MRF". Reuters. 14 February 2015 இம் மூலத்தில் இருந்து 14 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150214104152/http://in.reuters.com/finance/stocks/companyProfile?symbol=MRF.BO.