பொம்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொம்மை, ஒரு விளையாட்டுப் பொருள் ஆகும். பொதுவாக, பொம்மைகள் குழந்தைகளுடனும் வளர்ப்பு விலங்குகளுடனும் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டாலும், சில சமயங்களில் பெரியவர்களும் வீட்டில் வளர்க்கப்படாத விலங்குகளும் கூட பொம்மைகளுடன் விளையாடுவதைக் காணலாம். பொம்மையாக பயன்படுத்துவதற்காகவே பல விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. என்றாலும், வேறு முதன்மைப் பயன்பாடு உடைய பொருட்களும் பொம்மை போல் பயன்படுத்தப்படுவதை காணலாம். சில பொம்மைகள், பொம்மை விரும்பிகளால் சேகரிப்பதற்காக மட்டுமே இருக்கின்றன. அவற்றை விளையாடப் பயன்படுத்துவது இல்லை. எனினும் சிலர் விளையாடுவதற்காகவும் பயன்படுத்துகின்றனர்.

உலகை அறிந்து கொள்ளவும் வளர்ச்சி அடையவும் விளையாட்டுகளும் பொம்மைகளும் மிகவும் உதவுகின்றன. குழந்தைகள், பொம்மைகளை கொண்டு தங்களை அறிந்து கொள்ளவும், தங்கள் உடல் வலுவைக் கூட்டவும், வினை - விளைகளை அறியவும், தொடர்புகளைப் புரிந்து கொள்ளவும், பெரியவர்களாகும் போது தங்களுக்குத் தேவைப்படும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் செய்கின்றனர்.

பெரியவர்கள், சமூகத் தொடர்புகளை பெருகிக்கிக் கொள்ளவும், குழந்தைகளுக்கு கற்றுத் தரவும், தங்கள் சிறுவயதில் கற்ற பாடங்களை நினைவூட்டிக் கொள்ளவும், மனதுக்கும் உடலுக்கும் பயிற்சி அளிக்கவும், அன்றாடம் பயன்படுத்தாமல் போகக் கூடிய திறன்களில் பயிற்சி எடுக்கவும், தங்கள் வாழிடத்தை அழகூட்டவும் பொம்மைகளை பயன்படுத்துகின்றனர். வெறும் கேளிக்கை, விளையாட்டு என்பவற்றைத் தாண்டி, பொம்மைகளும் அவை பயன்படுத்தப்படும் முறைகளும் வாழ்வின் பல கூறுகளில் தாக்கத்தை உருவாக்குகின்றன.

பொம்மைகள் களிமண், நெகிழி, காகிதம், மரம், உலோகம் முதலானவற்றால் செய்யப்படுகின்றன. பொம்மைகள், முன்வரலாற்றுக் காலம் தொட்டே பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. குழந்தைகள், விலங்குகள், போர் வீரர்கள் ஆகியோரை உருவகிக்கும் பொம்மைகள், தொல்லியல் ஆய்வுக்களங்களில் காணக் கிடைத்திருக்கின்றன. 2004ஆம் ஆண்டு நடந்த தொல்லியல் ஆய்வின் மூலம் சுமார் 4000 வருட பழமையான கல் பொம்மை இத்தாலியத் தீவுகளுள் ஒன்றான பான்தலேரியா கிராமத்தில் கண்டறியப்பட்டது. இருப்பினும் இது விளையாட்டிற்கு பயன்படுத்தப்பட்டதா?, என்பதற்கான சான்றுகள் இல்லை.[1]

வரலாறு[தொகு]

குழந்தைகளின் விருப்பப் பொருளான பொம்மைகள், உலகின் கலை, பண்பாடு, அறிவியல், சமூகம் மற்றும் காலம் சார்ந்து பல ஆண்டுகளாக மேம்பாடடைந்துள்ளது. பொம்மைகளின் வரலாறு மிகச்சரியாக கணிக்க இயலாவிடினும் பல்வேறு மாற்றம், படிமங்கள் சார்ந்து அவற்றின் கால அளவைகளைக் கண்டறியலாம்.

எகிப்திய சிறார்கள்

பண்பாடு[தொகு]

குழந்தைகளின் திறன் மேம்பாடு[தொகு]

பாலினம்[தொகு]

பொருளாதரம்[தொகு]

இந்திய பொம்மைகள்[தொகு]

நவராத்திரி வழிபாடும் பொம்மைகளும்[தொகு]

கொலு[2]

தஞ்சை பொம்மைகள்[தொகு]

மரப்பாச்சி பொம்மைகள்[தொகு]

சன்னப்பட்டின பொம்மைகள்[தொகு]

கர்நாடக மாநிலத்தின் சன்னபட்டின கிராமத்தில் பல வருடங்களாக தயாரிக்கப்பட்டு வரும் இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் பொம்மைகள் சன்னபட்டின பொம்மைகள் ஆகும். இவை பலவகை வண்ணங்களுடன் யானை மரம் (அ) தந்த மரம், நூக்க மரம், மற்றும் சந்தன மரத்தால் (அரிதாக) செய்யப்படுபவை. பாவாஸ் மியான் சன்னப்பட்டின பொம்மைகளின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் தாம் கற்றுணர்ந்த சப்பானிய தொழில்நுட்பப் மூலம் பொம்மைகளைத் தயாரித்தார். பின்னர் இந்திய கலை மற்றும் ரசனைகளுக்கேற்ப உள்ளூர் கைவினைக் கலைஞர்களின் உதவியால் பொம்மைகளை உருவாக்கினார்.

வகைகள்[தொகு]

கட்டுமான பொம்மைகள்[தொகு]

கைப்பாவைகள் (அ) சிற்றுருக்கள்[தொகு]

வண்டி வடிவங்கள் (அ) சிறுத்தேர்[தொகு]

கணினி இலக்கப் பொம்மைகள்[தொகு]

அசைவுறும் பொம்மைகள்[தொகு]

பாதுகாப்பு ஒழுங்குமுறைகள்[தொகு]

அயலடைவு[தொகு]

விலங்கு பொம்மைகள்[தொகு]

மாதிரியுருக்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொம்மை&oldid=2292076" இருந்து மீள்விக்கப்பட்டது