சென்னை பாம்புப் பண்ணை அறக்கட்டளை
சுருக்கம் | CSPT |
---|---|
உருவாக்கம் | 1972 |
வகை | அரசு சார்பற்ற அமைப்பு |
சட்ட நிலை | லாப நோக்கமற்ற அறக்கட்டளை |
நோக்கம் | ஊர்வன விலங்குகள் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் கல்வி |
தலைமையகம் | சென்னை |
அமைவிடம் |
|
சேவைப் பகுதி | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
ஆட்சி மொழி | தமிழ், ஆங்கிலம் |
நிறுவனர் | உரோமுலசு விட்டேக்கர் |
மைய்ய அமைப்பு | அறக்கட்டளைக் குழு |
சார்புகள் | மத்திய விலங்குகள் காட்சிச்சாலை ஆணையம் [1] |
வலைத்தளம் | cspt.in |
ஆள்கூறுகள்: 13°00′25″N 80°13′33″E / 13.006899°N 80.225945°E
சென்னை பாம்புப் பண்ணை அறக்கட்டளை அல்லது கிண்டி பாம்பு பூங்கா, 1972ல் ஊர்வன விலங்குகள் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக, உரோமுலசு விட்டேக்கர் என்பவரால், கிண்டியில் தொடங்கப்பட்ட லாப நோக்கமற்ற அறக்கட்டளையாகும்.[2] கிண்டி தேசியப் பூங்கா வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள இப்பாம்புப் பண்ணையில் அரிய வகை நச்சுப் பாம்புகள் மற்றும் நச்சற்ற பாம்புகளை வளர்த்து இனப்பெருக்கம் செய்வதுடன், மருத்துவப் பயன்பாட்டிற்காக, பாம்புகளிடமிருந்து நச்சு சேகரிக்கப்படுகிறது. [3]மத்திய விலங்குக் காட்சிசாலை நிறுவனத்தால் 1995ல், இப்பாம்புப் பண்ணை, அங்கிகாரம் பெற்றது. [4]
பாம்புப் பண்ணை[தொகு]
கிண்டி தேசியப் பூங்கா வளாகத்தின் ஒரு பகுதியில், சென்னை ஆளுநர் மாளிகை அருகில் இப்பாம்புப் பண்ணை ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இனங்கள் & எண்ணிக்கை (1 அக்டோபர் 2010 நாளன்று) | |
---|---|
பாம்பு வகைகள் | 23 |
முதலைகள் | 7 |
ஆமைகள் மற்றும் கடல் ஆமைகள் | 3 |
பல்லி வகைகள் | 6 |
மொத்தம் | 39 |
<ref>"Zoos in Gharial Conservation". Gharial Conservation Alliance (nd). மூல முகவரியிலிருந்து 26 March 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 8 Oct 2011.செவ்வாய் கிழமை இப்பாம்புப் பண்ணையின் விடுமுறை நாளாகும்.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Central Zoo Authority
- ↑ "Agumbe Rainforest Research Station". ARRS (nd). மூல முகவரியிலிருந்து 17 March 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 8 Oct 2011.
- ↑ UNI. "Not possible to keep King Cobras on display:snake park chief". NewKerala.com (newKerala.com). http://www.newkerala.com/news/world/fullnews-132405.html. பார்த்த நாள்: 8 Oct 2011.
- ↑ "List of Zoos, whose Master Plan received till 31st March, 2011" (pdf). Central Zoo Authority of India (2011). மூல முகவரியிலிருந்து 27 September 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 8 Oct 2011.