உள்ளடக்கத்துக்குச் செல்

கிண்டி தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிண்டி தேசியப் பூங்கா
பூங்காவின் நுழைவு வாயில்
Map
திறக்கப்பட்ட தேதி1977
அமைவிடம்சென்னை, சென்னை மாவட்டம், தமிழ்நாடு,
இந்தியா இந்தியா
ஆண்டு பார்வையாளர்கள்700,000/2006[1]
உறுப்புத்துவங்கள்மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை
வலைத்தளம்www.forests.tn.nic.in/WildBiodiversity/np_gnp.html

கிண்டி தேசியப் பூங்கா சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா. இது, இந்தியாவில் எட்டாவது சிறிய தேசியப் பூங்காவாகும். ஒரு மாநகரின் எல்லைக்குள் அமைந்திருக்கும் அரிய வகை தேசியப் பூங்காக்களில் இப்பூங்காவும் ஒன்று. இப்பகுதி பரங்கியர் காலத்தில் கில்பெர்ட் ரோடிரிக்கிசு (Gilbert Rodericks) என்பவரின் சொந்த வேட்டையாடும் பகுதியாக ‘கிண்டி லாட்ஜ்’ எனப்பட்டது. இதை, 1821 ஆம் ஆண்டில் அன்றைய மதராஸ் அரசு ரோட்ரிக்ஸிடம் இருந்து அந்த இடத்தை அன்றைய மதிப்பில் 35,000 ரூபாய்க்கு வாங்கியது. இந்த காட்டுப் பகுதியைக் காப்பாற்றுவதற்காக, 1910 இல் மொத்த 505 எக்டர் நிலத்தையும் அரசு காப்புக் காடாக அறிவித்தது. பின்னர் 1958-இல் தமிழ் நாடு வனத்துறையின் கண்காணிப்பிற்கு மாற்றப்பட்டது. இருந்தாலும் 1961 இல் இருந்து 1977 க்குள் 172 எக்டர் நிலம் ஐ.ஐ.டி., காந்தி மண்டபம் போன்றவற்றின் பயன்பாட்டுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. எஞ்சியிருந்த 270.57 எக்டேர் காட்டுப் பகுதியை 1978 ஆம் ஆண்டு தேசியப் பூங்காவாக அரசு அறிவித்தது.[2]

தாவரங்கள்

[தொகு]

இந்த தேசிய பூங்கா உலர்/வறண்ட பசுமை காடுகள் மற்றும் புதற்காடுகள் தாவரங்களைக் கொண்டது. இங்கு 350க்கும் மேற்பட்ட தாவர சிற்றின வகைகள் காணப்படுகிறது.[3]

விலங்குகள்

[தொகு]

இங்கு 14 பாலூட்டி சிற்றினங்கள் உள்ளன. இதில் புள்ளி மான், கலைமான், நரி, கீரி போன்ற அதிக தொகையில் காணப்படுபவையாகும். 100க்கும் மேற்பட்ட பறவையினங்களும் இங்கு உண்டு. மேலும் பல்வேறு வகையான தவளைகள், ஊர்வன சிற்றினனங்களும் இங்கு காணப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gunidy National Park". தமிழ் நாடு வனத்துறை. பார்க்கப்பட்ட நாள் 2007-09-06.
  2. த . முருகவேள் (23 செப்டம்பர் 2017). "வெளிமான்கள் வாழ வழி பிறக்குமா?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 24 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. Care Earth (August 2006)Rapid Assessment of Biodiversity on the Campus of Indian Institute of Technology - Madras, The Director, Indian Institute of Technology Madras Chennai - 600 036, retrieved 9/5/2007 An Urban Wilderness Revisited, p. 2 பரணிடப்பட்டது 2008-10-31 at the வந்தவழி இயந்திரம்
  4. Oppili P. (Nov 16, 2004) The Hindu, retrieved 5/14/2007 "Looking for exotic species at the Guindy National Park" பரணிடப்பட்டது 2004-12-06 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிண்டி_தேசியப்_பூங்கா&oldid=3617260" இலிருந்து மீள்விக்கப்பட்டது