உள்ளடக்கத்துக்குச் செல்

செம்மஞ்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செம்மண்சேரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செம்மண்சேரி அல்லது செம்மஞ்சேரி, சென்னை மாவட்டததில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருக்கும் வருவாய் கிராமம் ஆகும். தற்போது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இங்கு சத்யபாமா ப‌ல்கலைக்கழகம், தேசிய கடல் பல்கலைக்கழகம். டிஎல்எப் (கார்டன் சிட்டி) மற்றும் பொல்லினேனி ஹில்சைட் ஆகிய புதிய கட்டுமானங்கள் இங்கே தொடங்கப்பட்டுள்ளன. செம்மண்சேரியில் ஒரு சிறிய பழமையான ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஆவின் பாலகம், ஜேப்பியார் கல்லூரி , செயின்ட் ஜான்ஸ் கல்லூரிகள் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளது. பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள இவ்வூர் ஒரு நகர கட்டமைப்பை கொண்டு சிறந்து விளங்கும் பகுதியாகும். சென்னையை ஒட்டியுள்ள பல கிராமங்களில் இந்த செம்மன்சேரி கிராமம் பல தொழிற்சாலைகள் மற்றும் மிகப்பெறும் கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மஞ்சேரி&oldid=3202042" இலிருந்து மீள்விக்கப்பட்டது