நோளம்பூர்
நோளம்பூர் Nolambur | |
---|---|
சுற்றுப்புறம் | |
ஆள்கூறுகள்: 13°04′50″N 80°10′48″E / 13.0805°N 80.1801°Eஆள்கூறுகள்: 13°04′50″N 80°10′48″E / 13.0805°N 80.1801°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் (இந்தியா) | சென்னை |
பெருநகர் | சென்னை |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வ மொழி | தமிழ் |
நேர வலயம் | இ.சீ.நே (ஒசநே+5:30) |
அ.கு.எண் | 600 095 |
நோளம்பூர் (Nolambur) சென்னை நகரத்தின் மேற்குப்பகுதி புறநகரில் மதுரவாயல் மற்றும் மேற்கு முகப்பேர் பகுதிகளுக்கு அருகிலுள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. முகப்பேர், அம்பத்தூர் தொழில்துறை தோட்டத்திலிருந்து வடக்கு நோக்கி சென்று நோலம்பூரை அடையமுடியும். மதுரவாயிலும் நெற்குன்றமும் நோலம்பூரின் தெற்கு எல்லைகளாகும். பாரதி சாலையும் அதன் தொடர்ச்சியாக உள்ள நோலம்பூர் இரண்டாவது பிரிவின் சாலையும் 70 அடி அகலத்தில் உள்ளன. அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் பயணத்திற்கான முதன்மை வழியை இச்சாலைகள் உருவாக்குகின்றன.
நோளம்பூரின் மேற்கு விளிம்புகளில் உள்வட்டச் சாலை சாலை இயங்குகிறது. இச்சாலை சென்னை நகரத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் விரைவான இணைப்பிற்கான இடமாக அமைகிறது. ஒரு சில பேருந்துகளும் இந்த பகுதி வழியாக செல்கின்றன [1]. செயின் சுந்தர்பான்சு அடுக்குமாடி குடியிருப்புகள், வி.கி.என் மினெர்வா குடியிருப்புகள், அக்சயா பசிபிக் சிட்டி, சிட்டி லைட் மெடோசு மற்றும் டி.ஏ.பி.சியின் பல்வேறு குடியிருப்புகள் ஆகியவை இப்பகுதியிலுள்ள முக்கியமான சில குடியிருப்புப் பிரிவுகளில் அடங்கும்.
பள்ளிகள்[தொகு]
- டி.ஏ.வி குழுமப் பள்ளி
- வேலம்மாள் குழுமப் பள்ளி
- டான் பள்ளி
- கிரீன் வேலி மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளி
- சிக்ராம் அகாதமி
- சிபார்டன் பள்ளி
- சிறீ சைதன்யா
இவற்றையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Ramkumar, Pratiksha (21 August 2012). "Nolambur residents’ wait for road continues". The Times of India. Archived from the original on 27 டிசம்பர் 2013. https://web.archive.org/web/20131227122809/http://articles.timesofindia.indiatimes.com/2012-08-21/chennai/33304118_1_metrowater-land-acquisition-act-connections. பார்த்த நாள்: 30 May 2018.