பூங்கா நகர் (சென்னை)
Appearance
(பூங்கா நகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பூங்கா நகர் (Park Town) இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையில் உள்ள ஓர் புறநகர்ப் பகுதியாகும்.ரிப்பன் கட்டிடத்தை அடுத்துள்ள மக்கள் பூங்காவினைக் கொண்டு இப்பகுதி "பூங்கா நகர்" என்று அழைக்கப்படுகிறது. ஐரோப்பியர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் இது வெள்ளையர் நகர் (White Town) என அறியப்பட்டிருந்தது.
பூங்கா நகர் சென்னை புறநகர் இருப்புவழி, சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம், சென்னை மெட்ரோ ஆகிய இருப்புவழிகளின் சந்திப்பு மையமாக திட்டமிடப்பட்டுள்ளது. தவிர நீள்தொலைவு இருப்புவழி முனையமான சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்துடன் இவற்றை இணைக்கிறது.[1][2]
பல முதன்மையான அரசு அலுவலகங்கள் இப்பகுதியில் உள்ளன.அவற்றில் சில:
- சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம்
- சென்னை அரசுப் பொது மருத்துவமனை
- சென்னை மருத்துவக் கல்லூரி
- சென்னை மாநகராட்சி
- மத்திய சிறை
- தென்னக இரயில்வே தலைமையகம்
கட்டிடங்கள்
[தொகு]-
பூங்கா நகர் போக்குவரத்து சைகை கம்பம்
-
ரிப்பன் கட்டிடம் - சென்னை மாநகராட்சியின் தலைமையகம்
-
சென்னை சென்ட்ரல்
-
விக்டோரியா பொதுக் கூடம், பூங்கா நகர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பூங்கா நகர் - சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தை இணைக்கும் பிரம்மாண்ட சுரங்கப்பாதை ஓரிரு நாட்களில் திறப்பு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
- ↑ "MGR, Central, Park City, The subway between, Railway station, எம்.ஜி.ஆர், சென்டிரல், பூங்கா நகர், ரெயில் நிலையம் இடையே சுரங்கப்பாதை". Maalaimalar. பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.