பொன்னேரி
பொன்னேரி | |
அமைவிடம் | 13°19′N 80°12′E / 13.32°N 80.2°Eஆள்கூறுகள்: 13°19′N 80°12′E / 13.32°N 80.2°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
வட்டம் | பொன்னேரி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | ப. பொன்னையா, இ. ஆ. ப [3] |
சட்டமன்றத் தொகுதி | பொன்னேரி |
சட்டமன்ற உறுப்பினர் |
ப. பலராமன் (அதிமுக) |
மக்கள் தொகை • அடர்த்தி |
31,025 (2011[update]) • 3,859/km2 (9,995/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
8.04 சதுர கிலோமீட்டர்கள் (3.10 sq mi) • 10 மீட்டர்கள் (33 ft) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.townpanchayat.in/ponneri |
பொன்னேரி (ஆங்கிலம்:Ponneri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட பேரூராட்சி ஆகும். பொன்னேரி வருவாய் கோட்ட தலைமையிடமாகவும், நீதிமன்றங்கள், அரசுக் கல்லூரி, அரசு மருத்துவமனை உள்ள இடமாகும்.
அமைவிடம்[தொகு]
இப்பேருராட்சியானது மாவட்ட தலைமையிடமான திருவள்ளுாிலிருந்து 60 கி.மீ தொலைவிலும் சென்னையிலிருந்து 37 கிமீ தொலைவிலும் உள்ளது. பொன்னேரியின் கிழக்கில் பழவேற்காடு 19 கிமீ; மேற்கில் செங்குன்றம் 22 கிமீ; வடக்கில் கும்மிடிப்பூண்டி 18 கிமீ; தெற்கில் மீஞ்சூர் 12 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு[தொகு]
8.04 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 265 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21 இப்பேரூராட்சி 7,842 வீடுகளும், 31,025 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 86.41% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1004 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
புவியியல்[தொகு]
இவ்வூரின் அமைவிடம் 13°19′N 80°12′E / 13.32°N 80.2°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 10 மீட்டர் (32 அடி) உயரத்தில் இருக்கின்றது.
கல்வி நிலையங்கள்[தொகு]
- அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
- உலகநாதன் நாராயணசாமி கலை & அறிவியல் கல்லூரி
- தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம்
- ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் பள்ளி
- ஈடன் மெட்ரிக்குலேசன் பள்ளி
- சரசுவதி கல்வியியல் கல்லூரி
- புனித யோவான் மெட்ரிக்குலேசன் பள்ளி
- வேலம்மாள் பன்னாட்டு பள்ளி
- வேலம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளி
- வேலம்மாள் CBSC பள்ளி
- பாரத் மெட்ரிக்குலேசன் பள்ளி
- ஆதர்ஷ் மெட்ரிக்குலேசன் பள்ளி
- சிரீதேவி கலை & அறிவியல் கல்லூரி ஆகியவை பொன்னேரியில் அமைந்துள்ளன.
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பொன்னேரி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Ponneri Population Census 2011
- ↑ "Ponneri". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.