துரை சந்திரசேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துரை சந்திரசேகர் (Durai. Chandrasekar) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆவார். இவர் சென்னையினை அடுத்துள்ள மாதவரத்தினை சார்ந்தவர். சந்திரசேகர் சென்னை தியாகராசர் கல்லூரியில் தாவரவியலில் இளம் அறிவியல் பட்டமும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து பட்டம் பெற்றுள்ளார். இவர் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Durai. Chandrasekar(Indian National Congress(INC)):Constituency- PONNERI (SC)(THIRUVALLUR) - Affidavit Information of Candidate:". myneta.info. 2021-11-03 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரை_சந்திரசேகர்&oldid=3309117" இருந்து மீள்விக்கப்பட்டது