ஆர். கே. பேட்டை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். கே. பேட்டை வட்டம் அல்லது இராமகிருஷ்ணராஜா பேட்டை வட்டம் (R.K. Pet taluk) தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தின் 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். பள்ளிப்பட்டு வட்டத்தின் இருந்த ஆர். கே. பேட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளைக் கொண்டு இப்புதிய வருவாய் வட்டத்தை 20 பிப்ரவரி 2019 அன்று, தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி காணொலி வாயிலாக சென்னையிலிருந்து திறந்து வைத்தார்.[1][2][3] இதன் தலைமையிடம் இராமகிருஷ்ணராஜ் பேட்டை எனும் ஆர். கே. பேட்டை ஆகும்.

ஆர். கே. பேட்டை எனும் இராமகிருஷ்ணராஜா பேட்டை வருவாய் வட்டத்தில் ஆர். கே. பேட்டை, பாலாபுரம் மற்றும் எறும்பி என 3 குறுவட்டங்களும், 37 வருவாய் கிராமங்களும் உள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாட்டில் 5 புதிய வட்டங்கள் துவக்கம்
  2. https://www.dinamani.com/tamilnadu/2014/sep/27/ஆர்.கே.பேட்டை-வட்டம்-உருவாக்-985919.html https://www.dinamani.com/tamilnadu/2014/sep/27/ஆர்.கே.பேட்டை-வட்டம்-உருவாக்[தொடர்பிழந்த இணைப்பு]]
  3. ஆர்.கே.பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம்
  4. TIRUVALLUR DISTRICT, Revenue Administration
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கே._பேட்டை_வட்டம்&oldid=3396529" இலிருந்து மீள்விக்கப்பட்டது