ரிப்பன் கட்டிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Ripon Building
இரிப்பன் கட்டிடம்
Ripon Building Chennai.JPG
ரிப்பன் கட்டிடம் is located in சென்னை
ரிப்பன் கட்டிடம்
சென்னையில் அமைவிடம்
மாற்றுப் பெயர்கள்மாநகராட்சிக் கட்டடம்
பொதுவான தகவல்கள்
வகைஅரசுக் கட்டிடங்கள்
கட்டிடக்கலைப் பாணிபுதிய தொன்மைக் கட்டிடங்கள்
நகர்சென்னை
நாடுஇந்தியா
ஆள்கூற்று13°04′54″N 80°16′18″E / 13.0817°N 80.2716°E / 13.0817; 80.2716
தற்போதைய குடியிருப்பாளர்பெருநகர சென்னை மாநகராட்சி
கட்டுமான ஆரம்பம்1909; 113 ஆண்டுகளுக்கு முன்னர் (1909)
நிறைவுற்றது1913; 109 ஆண்டுகளுக்கு முன்னர் (1913)
செலவு750,000 (in 1913)
உரிமையாளர்தமிழ்நாடு அரசு

ரிப்பன் கட்டிடம் (Ripon Building) தமிழ்நாடு, சென்னை மாநகராட்சியின் தலைமை இடம் ஆகும். இது கோதிக், அயனிய, மற்றும் கொறிந்திய ஆகிய மூன்று முக்கிய கட்டிடக் கலை ஒழுங்கு முறைகளில் கட்டப்பட்ட கட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

வரலாறு‍[தொகு]

இந்தோ சரசனிக் பாணியில், ரூ. 7.5 லட்சம் செலவில் , 132 அடி கொண்ட மைய கோபுரத்துடன், 252 அடி நீளம், 126 அடி அகலத்தில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இக்கட்டிடத்துக்கு உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீரமைப்புகளை செய்த லார்ட் ரிப்பனின் பெயர் சூட்டப்பட்டு, 1913- ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி திறக்கப்பட்டது.[1]

வெள்ளை நிறத்தில் அமைந்த இக்கட்டிடம் சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. லோகநாத முதலியார் என்பவரால் இந்திய ரூபாய் 750,000 செலவில் இது கட்டப்பட்டது. பிரித்தானிய இந்தியாவின் ஆளுநர் ரிப்பன் பிரபுவின் நினைவாக இக்கட்டிடத்துக்கு ரிப்பன் கட்டிடம் எனப் பெயரிடப்பட்டது. 1909, டிசம்பர் 12 இல் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு 1913 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "100 வயதை நிறைவு செய்கிறது ‘ரிப்பன்’". த தமிழ் இந்து‍ (நவம்பர் 26, 2013). மூல முகவரியிலிருந்து நவம்பர் 26, 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் நவம்பர் 27, 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிப்பன்_கட்டிடம்&oldid=3359334" இருந்து மீள்விக்கப்பட்டது