பெருநகர சென்னை மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சி | |
---|---|
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 29 செப்டம்பர் 1688 |
தலைமை | |
மேயர் | |
துணை மேயர் | மகேஷ் குமார், திமுக 4 மார்ச் 2022 முதல் |
ஆணையாளர் | ஜெ.இராதாகிருஷ்ணன்இ.ஆ.ப |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 200 |
அரசியல் குழுக்கள் | ஆளும் கட்சி (178)
எதிர்கட்சிகள் (22)
|
கூடும் இடம் | |
ரிப்பன் கட்டிடம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா | |
வலைத்தளம் | |
chennaicorporation |
பெருநகர சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) இந்தியாவின் தமிழக மாநிலத்தில் உள்ள மிகப் பழமையான நகராட்சி ஆகும். 1688 செப்டம்பர் 29 அன்று இது உருவாக்கப்பட்டது.[1] இதன் பட்டயம் (தனியுரிமை சாசனம்) 1687 டிசம்பர் 30-இல்[1] கிழக்கு இந்திய கம்பெனியரால் எற்படுத்தப்பட்ட, புனித ஜார்ஜ் கோட்டை நகராட்சி மற்றும் ஏனைய பிரதேசங்கள் என்ற அரசியலமைப்பின் பெயரால் கோட்டையின் 10 மைல்கள் தொலைவு எல்லையை வரையறையாகக் கொண்டு செயல்பட்டது.[1] சென்னை நகராண்மைக் கழகம் என்னும் பெயரில் இந்தியா விடுதலை அடையும் வரை செயல்பட்டது. சென்னை மாநகராட்சியின் ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 1875 கோடி ரூபாய் ஆகும். இது தமிழக மாநகராட்சிகளில் வரி வருவாயில் முதலிடத்தைக் கொண்டுள்ளது.
இம் மாநகராட்சி நகர வரிகள் வசூலிக்க 1972[1] ல் நாடாளுமன்றச் சட்ட செயல் இயற்றப்பட்டு அதிகாரம் வழங்கப்பட்டது அது மட்டுமில்லாமல் நகராட்சி நிர்வாகத்திற்கு கூடுதல் அதிகாரங்களையும் வழங்கியது. அதன் மக்கள்த் தொகைக்கு ஏற்ப அதன் நிர்வாக அமைப்பை மாற்றிக் கொள்ள அச்சட்டம் வழிவகை செய்தது. மதராஸ் நகராட்சி (திருத்தம்) சட்ட செயல் 1919[1] உரிமையளித்துள்ளதின்படி அதற்குத் தேவையான நிர்வாகக் கட்டமைவுகளை மாற்றியமைக்க முடியும்.
வரலாறு
[தொகு]30 டிசம்பர் 1687 அன்று சென்னை மாநகராட்சியை நிறுவ பிரித்தானியப் பேரரசர் இரண்டாம் ஜேம்ஸ் ஆணை இட்டார். பேரரசரின் இந்த ஆணை 29 செப்டம்பர் 1688 முதல் நடைமுறைக்கு வந்தது. ஒரு மேயர், 12 மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் 60 முதல் 100 பேர்கள் வரை கொண்ட பிரதிநிதிகளுடன் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. 12 மாமன்ற உறுப்பினர்கள் பிரித்தானிய, பிரான்சு மற்றும் இந்திய வர்த்தகக் குழுவிலிருந்து தேர்வு செய்யப்பட்டு, மேயரால் நியமிக்கப்பட்டனர்.
புனித ஜார்ஜ் கோட்டைக் குழுவில் இருந்த நத்தேனியல் ஹிக்கின்சன் சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக நியமிக்கப்பட்டார். மேயரின் பதவிக் காலம் ஓராண்டுதான். ஆனால் மாமன்ற உறுப்பினர்கள் ஆயுட்காலத்திற்கும் பதவியில் இருக்கலாம். 1727-ஆம் ஆண்டில் மாமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 9ஆக குறைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி 1746-ஆம் ஆண்டு முதல் 1749-ஆம் ஆண்டு வரை பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கீழ் செயல்பட்டது. சென்னை மாநகராட்சியின் முதல் கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டையில் ஒரு கட்டடத்தில் நடைபெற்றது.
1919-ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சிக்கு ஒரு குழுவும், அதற்கு தலைவர் ஒருவரும், 30 மாமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். சென்னை மாநகராட்சி மன்றக் குழவின் முதல் தலைராக பி. டி. இராஜன் தேர்வு செய்யப்பட்டார். 1936-ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சிக் குழுவின் எண்ணிக்கை 65ஆக உயர்த்தப்பட்டது. 1970களில் கவுன்சில் கலைக்கப்படும்வரை இந்த எண்ணிக்கையே நீடித்தது. சென்னை மாநகராட்சியின் ஆணையாளராக இந்தியக் குடிமைப் பணி அதிகாரி நியமிக்கப்பட்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி செயல்படும் தற்போதைய ரிப்பன் கட்டடம், இந்தியத் தலைமை ஆளுநர் ரிப்பன் பிரபு என்பவரின் நினைவாக பெயரிடப்பட்டது. ஜி.எஸ்.டி. ஹாரிஸ் என்பவரால் இக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டு, பி. லோகநாத முதலியாரால் 1913-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ரிப்பன் கட்டடத்தைக் கட்டி முடிக்க ஏழரை லட்ச ரூபாயும், நான்கு ஆண்டுகளும் ஆயின.1944-ஆம் ஆண்டில் ஜே.பி.எல். ஷெனாய் என்பவர் சென்னை மாநகராட்சியின் ஆணையாளராக இருந்த போது, 29 செப்டம்பர் 29ஆம் நாளன்று சென்னை மாநகராட்சியின் துவக்க நாளாக கொண்டாடப்படுகிறது.
1944ல் சென்னை மாநகராட்சியின் ஆணையராக இருந்த ஜே.பி.எல். ஷெனாயின்[2] காலத்தில்[3], செப்டம்பர் 29ஆம் தேதியை சென்னை மாநகராட்சியின் துவக்க நாளாக கொண்டாடும் வழக்கம் உருவானது.
1996-ஆம் ஆண்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது மேயரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுத்தனர். தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியாக தரம் உயர்ந்து, 200 மாமன்ற உறுப்பினர்களுடன் இயங்குகிறது. மேயர்கள் நேரடியாக மக்களால் தேர்வுசெய்யப்படும் முறை மாற்றப்பட்டு, மீண்டும் 2022-ஆம் ஆண்டு முதல் மாமன்ற உறுப்பினர்களால் தேர்வுசெய்யப்படும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி அன்றிருந்தநிலை மற்றும் தற்பொழுது
[தொகு]ஆண்டு | முந்தய மாநகராட்சியின் நிலை |
தற்பொழுதய மாநகராட்சியின் நிலை | |
---|---|---|---|
கோட்டம் | 1919[1] | 30 | 155 |
மக்கள் தொகை | 1921[1] | 5 இலட்சம் | 42 இலட்சம் |
பரப்பளவு | 1921[1] | 27.6 ச.மைல் | 174 ச.கி.மீ |
பெருநகர சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப்பகுதிகள்
[தொகு]2011-ஆம் ஆண்டிற்குப்பின் சென்னை மாநகராட்சியை ஒட்டிய செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் 174 சகிமீ பரப்பு கொண்ட 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. இதனால் பெருநகர சென்னை மாநகராட்சியின் பரப்பளவு 426 சதுர கிலோ மீட்டராக உயர்ந்தது.[4]
திருவள்ளூர் மாவட்டத்தின் 2 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகளும் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் 2 நகராட்சிகளும், 5 பேரூராட்சிகளும், 12 ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகளும் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. [5]
திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆலந்தூர், அம்பத்தூர், கத்திவாக்கம், மாதவரம், மதுரவாயல், மணலி, திருவொற்றியூர், உள்ளகரம், புழுதிவாக்கம் மற்றும் வளசரவாக்கம், சின்னசேக்காடு, புழல், போரூர், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் ஆகிய 18 பேரூராட்சிகள் சென்னை மாவட்டம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. மேலும் கீழ்கண்ட 25 கிராம ஊராட்சிகளும் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அவைகள்: இடையன்சாவடி, சடையன்குப்பம், காடப்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர், வடபெரும்பாக்கம், சுறாப்பேட்டை, கதிர்வீடு, புத்தகரம், நொளம்பூர், காரம்பாக்கம், நெற்குன்றம், ராமாபுரம், முகலிவாக்கம், மணப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், ஒக்கியம், துரைப்பாக்கம், மடிப்பாக்கம், ஜல்லடியான்பேட்டை, செம்மண்சேரி, நீலாங்கரை, உத்தண்டி [5]
விரிவாக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி 4.41 மில்லியன் வாக்காளர்களும், 15 மண்டலங்களும், 200 வார்டுகளும் கொண்டது.[6] [7] பெருநகர சென்னை மாகநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளை 93 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த 155 வார்டுகளை, புதிய 107 வார்டுகளுக்குள் அடக்கப்பட்டுள்ளது.[8]
வார்டுகள் இட ஒதுக்கீடு
[தொகு]சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் 26 வார்டுகள் பட்டியல் சமூகத்தவருக்கும், பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 58 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[7] [8]
மாநகராட்சியின் செயலாட்சி
[தொகு]ரிப்பன் மாளிகையில் இருக்கும் மாநகராட்சி ஆணையரே தலைமை செயலாட்சியராக[9] விளங்குகின்றார். இவருக்கு உதவி புரிய மூன்று இணை ஆணையர்கள் மற்றும் ஒரு துணை ஆணையர்கள் இந்திய ஆட்சிப் பணிப் பட்டயம் பெற்றவர்கள் பணிபுரிகின்றனர். எளிதான நிர்வாக செயல்பாட்டுக்காக சென்னை மாநகராட்சி 10 மண்டலங்காளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலங்கையும் நிர்வகிக்க மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களின் மேற்பார்வையில் செயல்படுகின்றன.
வ.எண் | செயலாட்சியர்கள் | எண்ணிக்கை | படிநிலை |
---|---|---|---|
1 | ஆணையர் | 1 | தலைமை செயலாட்சியர் (இ.ஆ.ப) |
2 | இணை ஆணையர் | 4 | செயலாட்சியர் (இ.ஆ.ப) |
3 | துணை ஆணையர் | 1 | செயலாட்சியர் (இ.ஆ.ப) |
5 | தலைமைப் பொறியாளர் | 2 | நிருவாக உதவி |
6 | கண்காணிப்புப் பொறியாளர் | 7 | நிருவாக உதவி |
மாநகராட்சியின் செயற்பாடுகள்
[தொகு]- மாநகராட்சியில் சிறப்புமிக்க செயல்திறனை உருவாக்குவதற்காக அதன் சட்ட விதிகள் அனுமதித்துள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி அமைக்கப் பட்டுள்ளவைகளாவன:
- மன்றம்
- மேயர்
- நிலைக்குழு
- வட்டக் குழு
- ஆணையர்
- அரசு அமைத்த ஆறு நிலைக்குழுக்களுடன் மேலும் ஒரு நியமனக்குழுவைக் கூடுதலாக ஒவ்வொரு மண்டலுத்துக்கும் வட்டக் குழுவுக்காக அமைத்துள்ளது. அரசு அமைத்துள்ள ஆறு நிலை குழுக்கள்:
- நிலைக்குழு (கணக்கீடு)
- நிலைக்குழு (கல்வி)
- நிலைக்குழு (சுகாதாரம்)
- நிலைக்குழு (நகரத் திட்டம்)
- நிலைக்குழு (பணி)
- நிலைக்குழு (வரியும் நிதியும்)
பள்ளிகள் நிர்வாகம்
[தொகு]சென்னை மாநகராட்சியின் நிர்வாகத்தின் கீழ் வரும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இயலாத பள்ளிகளில், 2014ஆம் ஆண்டு முதற்கட்ட நடவடிக்கையாக அடுத்த கல்வியாண்டில் இருந்து ஏழு பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைத்துவிட்டு, ஆண்டுக்கு ஒரு மாணவருக்கு 10000 ரூபாய் வரை பள்ளியை எடுத்து நடத்தும் தனியாருக்கு வழங்கவும், பத்தாண்டுகளுக்குப் பின்னர் அப்பள்ளிகளை தனியார்வசம் ஒப்படைக்கவும் சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. இதில் மாணவர் சேர்க்கையில் அரசு தலையிடாது.ஏழை எளிய மாணவர்கள் இலவசக்கல்வி பெறுவதைத் தடைசெய்யும் விதத்திலும், தனியாருக்கு துணைபோகும் விதத்திலும் சென்னை மாநகராட்சி செயல்படுகின்றது என்ற குற்றச்சாட்டு இதனால் எழுந்துள்ளது.[10][11][12]
மாநகராட்சி மன்றம்
[தொகு]மேயரைத் தேர்ந்தெடுக்கும் பழைய முறை
1950 க்கு முன்னரும் 1973 [9] வரை மாநகராட்சி மன்றம் செயல் பாட்டிலிருந்த்து 1973 ல் மாநில அரசால் கலைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் இருந்த நடைமுறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நாகராட்சி உறுப்பினர்கள் 3 ஆண்டுகள் [9] பணியாற்றக் கூடிய வகையிலும் , இந்தக் காலகட்டத்திலேயே மேயரும் துணை மேயரும் வருடத்திற்கு ஒரு முறை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் படி பணியாற்றும் முறை பின்பற்றப்பட்டு வந்த்து. இதற்கு மேலும் மேயர் சுழற்சி முறையில் சாதி அடிப்படையில் மற்றும் சமய அடிப்படையில் முக்கிய நபர்களாக விளங்குபவர்களை மேயர்களாக தேர்ந்தெடுத்து பதவி அமர்த்தி வந்தனர்.
கலைப்பு
1-12-1973[9] ல் மன்றம் மாநில அரசால் கலைக்கப்பட்டதற்குப்பின் அப்பொழுது அரசால் சட்டப்படி அமைக்கப்பட்ட அலுவலர்களாலும், நிரந்தர உறுப்பினர்களாலும் மன்றம் நடத்தப்பெற்று வந்தது.
மீண்டும் மாநகராட்சி மன்றம்
1996 ல் சுமார் 23 வருடங்களுக்குப் [9] பிறகு மாநில அரசால் மீண்டும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பெற்று மன்றம் செயல்படத் துவங்கியது. மாநகாரட்சி மற்றும் மன்ற சட்டங்களில் திருத்தம் மாநில அரசால் கொண்டு வரப்பட்டு அதன்படி உறிப்பினர்களின் ஆயுட்காலம் 5 வருடமாக [9] ஆக்கப்பெற்றது. மேயர் மற்றும் துணை மேயர்களின் பதவி ஆயுட்காலமும் 5 வருடங்கள் என்று நிர்ணயம் செய்யப்பெற்று தற்பொழுது வரை பின்பற்றப் பட்டு வருகின்றது.
தற்பொழுதய மாநகராட்சி மேயர் ÂU. irij Jiurhä
மன்றத்தின் செயற்பாடுகள்
[தொகு]மாநகராட்சி மன்றம் அதன் தலைவரான மேயரின் தலைமையில் வட்ட உறுப்பினர்களுடன் மாதந்தோரும் கூடி மாநகராட்சித் தேவையான வளர்ச்சித் திட்டங்களை வகுக்கின்றது. அதனை வாதங்களுக்குப்பின் நிறைவேற்றுகின்றது. மாநகராட்சி மன்றத்தின் செயற்பாடுகளாக மாநகராட்சி விதியில் கூறப்பட்டுள்ளவை-;
- பிரிவு 23 சிசிஎம்சி சட்டம், 1919 இன்படி மாநகாரட்சி நிருவாகம் அதன் மன்றத்தைச் சார்ந்தே உள்ளது, ஆனால் மன்றம் அதன் நிலைக்குழுவையோ அல்லது ஆணையரையோ கட்டுபடுத்த உரிமை வழங்கப்படவில்லை.
- அதன் நிருவாகத்தில், ஏதாவதொரு செயற்பாட்டில் சந்தேகங்கள் ஏற்படின், சந்தேகப்படும் செயலை மேயர், அம்மாநில அரசின் கவனத்துக்கு கொண்டுவரும் பட்சத்தில், அச்செயல் குறித்து அம்மாநில அரசு எடுக்கும் முடிவே இறுதியானது.
- பொதுவிதி பிரிவி 1 இன் படி சார்பின்மையாக மன்றம் மாநகராட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான வரவு செலவுத் திட்டங்கள், முன்னேற்றத் திட்டங்கள சரியெனக் கருதும் பட்சத்தில் நிறைவேற்றித் தரவேண்டும்.
மாநில அரசின் அதிகாரங்கள்
[தொகு]- பிரிவு 43 ஏ இன் படி மாநில அரசு மாநகராட்சியின் மேயர், துணை மேயர் நீக்கும் அதிகரங்களையும் அல்லது வட்ட உறுப்பினர்களை பிரிவு 358 ஏ இன் படி குற்றக் காரணம் காட்டி நீக்கும் அதிகாரங்களை பெற்றுள்ளன.
- இந்த விதியில் அடங்கிய காரணங்கள் எப்படியிருந்தாலும் மாநில அரசு தனது குறிப்பாணைகள் மூலம் மேயரையும். துணை மேயரையும் அல்லது வட்ட உறுப்பினர் எவரேனும் இருமுறை குற்றசெயல்களுக்காக தண்டணை பெற்றதனை காரணங்காட்டி பிரிவு 358 ஏ இன் படி நீக்கவியலும்.
- மாநில அரசு நீக்கும் செயலை துணைப் பிரிவு (1) இன் படி முன்மொழிதல் மூலம்
அறிவிக்கை செய்து, அதன் பொருட்டு இவர்கள் தரப்பு பதிலை கேட்டறிந்தபின் நீக்கலாம்.
- நீக்கபட்ட மேயரோ, துணை மேயரோ, அல்லது வட்ட உறுப்பினர்களோ மறுப் பொதுத் தேர்தல் வரும் வரையிலோ அல்லது நீக்கபட்டதிலிருந்து ஒரு வருட காலம் முடியாத தருணத்திலோ, எது முன் நிகழ்கின்றதோ, அது வரை மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.
2022 சென்னை மாநகராட்சி தேர்தல்
[தொகு]2022-ஆம் ஆண்டில் சென்ன மாநகராட்சியின் 200 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் 22 பிப்ரவரி 2022 அன்று நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 179 வார்டுகளையும், அதிமுக 15 வார்டுகளையும், பாரதிய ஜனதா கட்சி மற்றும் அமமுக தலா 1 வார்டையும், சுயேச்சைகள் 4 வார்டுகளையும் கைப்பற்றினர். 4 மார்ச் 2022 அன்று நடைபெற்ற மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில், மேயராக திமுகவின் ஆர். பிரியாவும், துணை மேயராக மு. முகேஷ்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.[13]
இதனையும் காண்க
[தொகு]- பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள்
- சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்) பட்டியல்
- சென்னை மாநகரக் காவல் ஆணையரகம்
- சென்னை மாவட்டம்
- தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம்
- ஆவடி மாநகரக் காவல் ஆணையரகம்
- சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
வெளி இணைப்புக்கள்
[தொகு]- சென்னை மாநகராட்சி இணையத் தளம் பரணிடப்பட்டது 2009-03-22 at the வந்தவழி இயந்திரம்
- விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும்; வார்டுகளும் பரணிடப்பட்டது 2011-11-04 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 மாநகராட்சி -ஒர் அறிமுகம்-சென்னை மாநகராட்சி இணையத்தளம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ https://www.thehindu.com/society/history-and-culture/This-might-have-been-in-French/article15858192.ece]
- ↑ https://www.thehindu.com/society/history-and-culture/This-might-have-been-in-French/article15858192.ece]
- ↑ More areas to come under Chennai Corporation
- ↑ 5.0 5.1 "More areas to come under Chennai Corporation". The Hindu. 30 December 2009 இம் மூலத்தில் இருந்து 2 ஜனவரி 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100102070154/http://www.hindu.com/2009/12/30/stories/2009123057580100.htm. பார்த்த நாள்: 31 August 2012.
- ↑ Greater Chennai Corporation Zones and Wards
- ↑ 7.0 7.1 Ramakrishnan, Deepa H (20 September 2011). "Details of merged wards online soon". The Hindu. http://www.thehindu.com/news/cities/chennai/article2468466.ece. பார்த்த நாள்: 31 August 2012.
- ↑ 8.0 8.1 "சென்னை மாநகராட்சி எல்லைகள் விஸ்தரிப்பு- 200 வார்டுகளுடன் மெகா மாநகராட்சியானது". OneIndia.in. பார்க்கப்பட்ட நாள் 31 August 2012.
- ↑ 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 சென்னை மாநகராட்சி மன்றம்-சென்னை மாநகராட்சி இணையத்தளம், பரணிடப்பட்டது 2009-03-28 at the வந்தவழி இயந்திரம்|(பார்வையிட்டு பரணிடப்பட்ட நாள் 18-03-2009)]
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=1127435
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=1124015
- ↑ தினத்தந்தி தொலைக்காட்சி செய்திகள்; 01.12.2014
- ↑ சென்னை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் 2022