இந்தியக் குடிமைப் பணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்தியக் குடிமைப் பணி அல்லது ஐ.சி.எஸ் (Indian Civil Service) பிரித்தானிய இந்தியாவை நிருவாகம் செய்ய காலனிய அரசால் ஏற்படுத்தப்பட்ட குடிமைப் பணியாகும். 1886 இல் தொடங்கப்பட்ட இது அதிகாரப்பூர்வமாக வேந்திய குடிமைப் பணி அல்லது பிரித்தானிய இந்தியாவின் குடிமைப் பணி என்று அழைக்கப்பட்டது.

தொடக்கத்தில் இதன் முதன்மை உறுப்பினர்கள் அனைவரும் பிரித்தானியர்களே. பின் இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மெல்லக் கூடியது. 1914 ஆம் ஆண்டில் 5% உறுப்பினர்கள் இந்தியர்களாக இருந்தனர். 1942 இல் 597 இந்திய உறுப்பினர்களும் 588 பிரித்தானிய உறுப்பினர்களும் இருந்தனர். 1947 இல் இந்தியா விடுதலை பெற்றபின்னர் பிரித்தானிய உறுப்பினர்களில் மிகப் பெரும்பாலானோர் தாயகம் திரும்பி விட்டனர். இந்தியப் பிரிவினைக்குப் பின், இவ்வமைப்பு இந்தியக் குடியரசின் குடிமைப் பணி, பாகிஸ்தான் குடிமைப் பணி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியக்_குடிமைப்_பணி&oldid=1606768" இருந்து மீள்விக்கப்பட்டது