சிந்தாதிரிப்பேட்டை
தோற்றம்
சிந்தாதிரிப்பேட்டை
சின்ன தறிப்பேட்டை | |
|---|---|
நகர்ப்பகுதி | |
| ஆள்கூறுகள்: 13°4′N 80°16′E / 13.067°N 80.267°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | தமிழ் நாடு |
| மாவட்டம் | சென்னை மாவட்டம் |
| பெருநகரம் | சென்னை சென்னை மாவட்டம் |
| மண்டலம் | 05 |
| வார்டு | 62 |
| அரசு | |
| • நிர்வாகம் | பெருநகர சென்னை மாநகராட்சி |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (ஒசநே) |
| இணையதளம் | www |
சிந்தாதிரிப்பேட்டை (ஆங்கிலம்: Chintadripet) சென்னையின் மையப்பகுதியாகும். இந்தப் பகுதியில் சொற்பமான அளவில் நெசவாளர்கள் வசித்து வந்தனர். தறி கொண்டு நெசவு தொழில் செய்து வந்த இப்பகுதி சின்ன தறிப்பேட்டை (தறி - நெசவு செய்யப் பயன்படும் கருவி) என்று அழைக்கப்பட்டு வந்தது. அதுவே பேச்சு வழக்கில் மருவி சிந்தாதிரிப்பேட்டை ஆகிவிட்டது.


பூங்கா
[தொகு]சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்கா 14.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. முதலில் இப்பூங்கா நேப்பியர் பூங்கா என்று அழைக்கப்பட்டது. இப்பூங்காவில் மே தினத்தன்று சிறப்பு மேடைப் பேச்சுக்கள் இடம் பெறும். மே தினப் பூங்கா 13 செப்டம்பர் 1950-இல் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Amirthalingam, M. "Parks of Chennai". Envis Centre on Conservation of Ecological Heritage and Sacred Sites of India. CPREEC. Archived from the original on 3 ஏப்ரல் 2015. Retrieved 4 Feb 2012.