மாதவரம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை மாவட்டத்தின் 3 வருவாய் கோட்டஙகளும், 16 வருவட்டங்களின் வரைபடம்

மாதவரம் வட்டம் , தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். முன்னர் இது திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தது. சென்னை மாவட்டத்தின் பரப்பளவை விரிவாக்கும் போது, இவ்வட்டம் சென்னை மாவட்டத்தின் மேற்கு சென்னை வருவாய் கோட்டத்துடன் இணைக்கப்பட்டது. மாதவரம் வட்டத்தில் 1 உள்வட்டமும், 11 வருவாய் கிராமங்களும் உள்ளது.[1]

பெருநகர சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்த போது[2] மாதவரம் உள்வட்டத்தின் மாதவரம் 1, மாதவரம் 2, மாத்தூர், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், புத்தகரம், செங்குன்றம், கதிர்வேடு மற்றும் சூரப்பட்டு முதலிய 11 வருவாய் கிராமங்களை சென்னை மாநகராட்சியின் மாதவரம் மண்டல எண் 3-இல் இணைக்கப்பட்டது. மாதவரம் மண்டலத்தில் வார்டு எண்கள் 22 – 33 வரை உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. வருவாய் நிர்வாகம்
  2. சென்னை பெருநகர மாநகராட்சியின் பகுதிகள்
  3. பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும்; வார்டுகளும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவரம்_வட்டம்&oldid=2795839" இலிருந்து மீள்விக்கப்பட்டது