பிர்லா கோளரங்கம், சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிர்லா கோளரங்கம்
நிறுவப்பட்டது11 மே1988 (1988-05-11)
அமைவிடம்எண். 4, காந்தி மண்டபம் சாலை,கோட்டூர்புரம்,சென்னை,இந்தியா .
வகைகோளரங்கம்
இயக்குநர்P.அய்யம்பெருமாள்
Public transit accessKasturba Nagar railway station
வலைத்தளம்tnstc.gov.in/index.htm
பிர்லா கோளரங்கம்

பிர்லா கோளரங்கம் (Birla planetarium) சென்னை, கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தில் அமைந்துள்ள இந்தகோளரங்கத்தில் 500 கலைக்கூடங்கள் கொண்ட எட்டு அரங்கங்கள், இயற்பியல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எரிசக்தி, வாழ்க்கை அறிவியல், கண்டுபிடிப்புகள், போக்குவரத்து, சர்வதேச குழந்தைகள் மற்றும் பொம்மைப் பொருட்கள் விஞ்ஞானம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

அமைவிடம்[தொகு]

பெரியார் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தில் அமைந்துள்ள பிர்லா கோளரங்கம்

பிர்லா கோளரங்கமானது எண் 4, காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம் பெரியார் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தில் அமைந்துள்ளது. கிண்டி தேசிய பூங்கா அருகே உள்ளது. சென்னை ஐ.ஐ.டி, அடையார் புற்றுநோய் மருத்துவமனை, அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா  நூலகம் போன்றவைகள் இதன் அருகே உள்ளன .[1] 

அம்சங்கள்[தொகு]

பத்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் (2002-2007) பெரியார் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும் பி. எம். பிர்லா பிளானட்டேரியம் ஆகியவற்றிற்காக முன்மொழியப்பட்ட மொத்த செலவு 6.4 மில்லியன் ஆகும்.[2]

அறிவியல் பூங்காவில் ஒரு ஏவூர்தி மாதிரி

2009 ல் இந்தியாவிலேயே முதன்முதலாக 360 கோண வான திரையரங்கம் அமைக்கப்பட்டது. [3] 

2009 ஆம் ஆண்டில், சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நீல் ஆம்ஸ்ட்ராங், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் கல்பனா சாவ்லா ஆகியோரின் ஓவியங்களை நன்கொடையாக வழங்கியது.[4]

2011-2012 ஆம் ஆண்டில் கோளரங்கத்தை புதிப்பிக்க  1.5 மில்லியன் தொகயை தமிழக அரசு வழங்கியது.[5]

நிகழ்ச்சிகள்[தொகு]

ஒவ்வொரு நாளும் பல மொழிகளில் வெவ்வேறு நேரங்களில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சூரியன் அமைப்பு, வானம் மற்றும் பருவங்கள், கிரகணம், கிரகம், மூன், வால் நட்சத்திரம், வால்மீன்கள், விண்மீன் சுழற்சிகள் மற்றும் ஆழ்ந்த வானம் ஆகியவை இதில் அடங்கும். 3 மாதத்திற்கு ஒருமுறை இவை மாற்றம் செய்யப்படும்.[6] தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு விடுமுறை தவிர்த்து காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறும்.
இவற்றையும் காண்க[தொகு]


சான்றுகள்[தொகு]

  1. "Birla Planetarium". 16 Oct 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Chapter 14, Science and Technology" (pdf). Government of Tamil Nadu. 16 Oct 2011 அன்று பார்க்கப்பட்டது.
  3. TNN (26 April 2009). "New image projector for Birla Planetarium". The Times of India (Chennai: The Times Group). Archived from the original on 15 செப்டம்பர் 2012. https://web.archive.org/web/20120915015257/http://articles.timesofindia.indiatimes.com/2009-04-26/chennai/28029603_1_projector-birla-planetarium-p-iyamperumal. பார்த்த நாள்: 16 Oct 2011. 
  4. "American Space Icons on the Walls of The Birla Planetarium". Consulate General of the United States. 15 அக்டோபர் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 Oct 2011 அன்று பார்க்கப்பட்டது.
  5. "G.O.(2D).No. 27" (pdf). Government of Tamil Nadu. 24 October 2011. 30 Oct 2011 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Birla Planetarium". ChennaiNetwork.com. 15 அக்டோபர் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 Oct 2011 அன்று பார்க்கப்பட்டது.