மண்ணடி
Appearance
மண்ணடி (Mannady) என்பது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இது மாவட்டத் தலைநகரான பத்தனம்திட்டாவுக்கு தெற்கே 24 கி.மீ. தொலைவிலும், மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 82 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[1]
பகுழ்பெற்ற வேலுத்தம்பி தளவாய் தன் இறுதிகாலத்தைக் கழித்தது மண்ணண்டி ஊரில்தான். பழமைவாய்ந்த பகவதி கோயில் இங்குள்ளது. இக்கோயில் அழகிய கற்சிற்பங்களுக்கு பெயர்பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பெப்ரவரி-மார்ச் மாதங்களில் திருவிழா நடக்கிறது. கேரளத்தின் நாட்டார் ஆய்வு மையமும், நாட்டார் கலை பயிலகமும் இந்த ஊரில் செயல்படுகின்றன.[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ http://www.onefivenine.com/india/villages/Pathanamthitta/Parakode/Mannady
- ↑ கேரளா ஒரு சுற்றுலா பார்வை, கலைமாமணி வி.கே.டி. பாலன், மதுரா வெளியீடு, 2005, பக்கம் 281