அம்பத்தூர் வட்டம்
Appearance
அம்பத்தூர் வட்டம், தமிழ்நாட்டின், சென்னை மாவட்டத்தில் அமைந்த 16 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] மத்திய சென்னை வருவாய்க் கோட்டத்தில் அமைந்த அம்பத்தூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் அம்பத்தூரில் இயங்குகிறது. அம்பத்தூர் வட்டம் 2 உள்வட்டங்களும், 10 வருவாய் கிராமங்களும் கொண்டது. முன்னர் அம்பத்தூர் வட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தது.[2]
அம்பத்தூர் குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்
[தொகு]- மண்ணூர்பேட்டை
- அத்திப்பட்டு
- அம்பத்தூர்
- பாடி
- முகப்பேர்
- காக்கப்பள்ளம் (H)
கொரட்டூர் குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்
[தொகு]- ஒரகடம்
- பட்ரவாக்கம்
- மேனாம்பேடு
- கொரட்டூர்