அடையாறு (ஆறு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடலில் கலக்கும்முன்

அடையாறு சென்னை நகரில் ஓடும் ஆறுகளில் ஒன்று ஆகும். கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனுாரில் துவங்கும் அடையாறு, மண்ணிவாக்கம், வரதராஜபுரம், முடிச்சூர், திருநீர்மலை, அனகாபுத்தூர், காட்டுப்பாக்கம், மணப்பாக்கம் வழியாக, பட்டினப்பாக்கம் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இதன் மொத்த நீளம், 42.5 கிமீ., ஆகும். அகலம், இடத்திற்கு ஏற்ப, 60 - 200 அடி என மாறுபட்ட அளவில் இருந்தது. காலப்போக்கில், கரையோரம் ஆக்கிரமிப்பு அதிகரித்ததால், இதன் அகலம் 20 - 100 அடியாக சுருங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் வடகிழக்கு பகுதிகள், தென் சென்னை பகுதிகளிலிருந்து, மழைக் காலத்தில் வெளியேறும் உபரிநீரை, கடலுக்கு எடுத்து செல்லும் பணியை, அடையாறு ஆறு செய்கிறது.[1]

சென்னையில் ஓடும் கூவம் அளவிற்கு இல்லாவிடினும், இந்த ஆறு மாசு மிகுந்து காணப்படுகிறது. ஆதலால் முன்பு நடைபெற்ற மீன்பிடித் தொழில் இப்பொழுது சாத்தியமற்றதாகி விட்டது. ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதி 1,142 சதுர கிலோமீட்டர். ஆற்றின் நீளம் 42.5 கி.மீட்டர், சென்னை புறநகரில் 24 கிலோமீட்டரும், சென்னை நகருக்குள் 15 கிலோமீட்டரும் ஓடுகிறது. ஆற்றின் அதிபட்ச கொள்ளளவு வினாடிக்கு 60,000 கன அடி, சராசரி கொள்ளளவு 30,000 கன அடி, 2005 ஆம் ஆண்டு வெள்ளம் வந்தபோது ஆற்றில் ஓடிய தண்ணீர் 55,000 கன அடி.

அடையாறு சீரமைப்புப் பணிகள்[தொகு]

அடையாறு ஆற்றின் முதல் 25.4 கிமீ நீளம் வரையிலான இரண்டாம் கட்ட சீரமைப்பு பணிகள் 90 கோடி ரூபாய் செலவில் மார்ச், 2020-இல் முடிய உள்ளது. [2]

சைதாப்பேட்டை பாலத்திற்குக் கீழே

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடையாறு_(ஆறு)&oldid=2754095" இருந்து மீள்விக்கப்பட்டது