சோழவரம் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோழவரம் ஏரி
அமைவிடம்திருவள்ளூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்13°13′39″N 80°09′01″E / 13.22757°N 80.15024°E / 13.22757; 80.15024ஆள்கூறுகள்: 13°13′39″N 80°09′01″E / 13.22757°N 80.15024°E / 13.22757; 80.15024
வகைநீர்த்தேக்கம்
வடிநில நாடுகள்இந்தியா

சோழவரம் ஏரி (Sholavaram aeri) தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு மழைநீர்ப் பிடித் தேக்கமாகும். இந்த நீர்த்தேக்கத்திலிருந்து அண்மையிலுள்ள சென்னை மாநகரத்திற்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த ஏரி சென்னையில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். சென்னை அருகே உள்ள இத்தகைய ஏரிகள் இயற்கை அழகு, தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் நிறைந்தவை. சோழவரம் விமானதளம் அருகே இது அமைந்துள்ளது. இது இந்திய இராணுவம் தங்களது நடவடிக்கைகளைச் சோதித்துப் பார்க்கும் இடமாக உள்ளது. சோழவரம், புழல் ஏரிகள் கால்வாயால் இணைக்கப்பட்டுள்ளன. சுற்றியுள்ள மக்கள், திருவள்ளூர் பிரதானச் சாலை, ரெட்ஹில்ஸ் சந்திப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றுக்குக் கால்வாய்ப் பாதையைப் பயன்படுத்துகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழவரம்_ஏரி&oldid=3613292" இருந்து மீள்விக்கப்பட்டது