செம்பியன் மாதேவி ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செம்பியன் மாதேவி பேரேரி அல்லது கண்டராதித்தம் ஏரி என்பது தமிழ்நாட்டின், அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் உள்ள கண்டராதித்தம் கிராமம் என்னும் கிராமத்தில் உள்ளது. இந்த ஏரியை வெட்டிய சோழன் கண்டராதித்தனுக்கும் அவன் மனைவி செம்பியன் மாதேவியருக்கு கண்டராதித்தம் ஊர் பொதுமக்களால் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

சோழப் பேரரசின் மன்னனான கண்டராதித்த சோழன் கி.பி. 950 இருந்து 958 வரை சோழப் பேரரசை ஆண்டவன். இவன் தனது இரண்டாவது மனைவியான செம்பியன் மாதேவியின் விருப்பத்தை ஏற்று அவள் பெயரில் இவன் வெட்டிய ஏரிதான் இது.[1] இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 415.03 ஏக்கர்கள். பதிவுவான ஆயக்கட்டுப் பகுதி 20 கிராமங்களுக்கு உட்பட்ட 4532.99 ஏக்கர் நிலம். இதற்கு நீர்வரத்து கொள்ளிடம், மழைக் காலங்களில் நந்தியாறும் கூழையாறும் கொண்டுவரும் உபரி நீரும் ஆகும். ஆகியவற்றில் இந்த ஏரிக்கான நீர்வரத்து. வேளாண்மைக்கு தண்ணீர் திறப்பதற்காக ஏரியின் கிழக்குப்பகுதியில் ஏழு மதகுகள், வடக்குப் பகுதியில் ஒரு மதகு என எட்டு மதகுகள் உள்ளன. ஏரியிலிருந்து அதிகபட்சமாக விநாடிக்கு 47.04 கன மீட்டர் தண்ணீரை வெளியேற்ற முடியும். ஏரியின் மொத்த ஆழம் 4.5 மீட்டர்கள். இப்போது இதில் ஏறக்குறைய 1.5 மீட்டர் உயரத்துக்கு வண்டல் மண்ணால் தூர்ந்துள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கண்டராதித்த சோழர்-செம்பியன் மாதேவி உருவச்சிலை திறப்பு விழா". செய்தி. தினகரன். 2016.4.27. 5 செப்டம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  2. குள. சண்முகசுந்தரம் (16 சூலை 2015). "அலையடித்த ஏரியில் புழுதிப் புயல் வீசும் பரிதாபம்". கட்டுரை. தி இந்து. 5 செப்டம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பியன்_மாதேவி_ஏரி&oldid=3613438" இருந்து மீள்விக்கப்பட்டது