புழல் ஏரி
Appearance
(செங்குன்றம் ஏரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புழல் ஏரி | |
---|---|
அமைவிடம் | புழல், பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு |
ஆள்கூறுகள் | 13°09′43″N 80°10′38″E / 13.1620°N 80.1771°E |
வகை | நீர்த்தேக்கம் |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 4,500 ஏக்கர்கள் (18 km2) |
நீர்க் கனவளவு | 3,300 மில்லியன் கன அடி |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 55 மீட்டர் |
புழல் ஏரி அல்லது செங்குன்ற ஏரி (Pulhal Lake அல்லது Red Hills Lake) என்றழைக்கப்படும் நீர்த்தேக்கமானது தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி வட்டத்தில் புழல் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் மூன்று ஏரிகளில் இது ஒன்றாகும்;[1] மற்றவை செம்பரம்பாக்கம் ஏரியும் மற்றும் சோழவரம் ஏரியுமாகும். இது மழைநீர் பிடி நீர்த்தேக்கமாகும். இதன் முழு கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி[2] (93 மில்லியன் மீ3). இங்கு அமைக்கப்பட்டுள்ள பூங்கா ஒரு சுற்றுலா இடமாக விளங்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "புழல் ஏரி உபரிநீர் கால்வாய் மேம்பாடு திட்ட அறிக்கை தயாரிக்க ஏற்பாடு - Dinamalar Tamil News". Dinamalar. 2023-05-30. பார்க்கப்பட்ட நாள் 2023-08-24.
- ↑ "சென்னை புழல் ஏரி முழு கொள்ளளவை நெருங்கியதால் நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை". News18 Tamil. 2021-11-07. பார்க்கப்பட்ட நாள் 2023-08-24.
வெளி இணைப்புகள்
[தொகு]