நொய்யல் ஒரத்துப்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரத்துப்பாளையம் அணை
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Tamil Nadu" does not exist.ஒரத்துப்பாளையம் அணை அமைவிடம்
அதிகாரபூர்வ பெயர் நொய்யல் ஒரத்துப்பாளையம்
நாடு இந்தியா
அமைவிடம் காங்கேயம், திருப்பூர் மாவட்டம்.
புவியியல் ஆள்கூற்று 11°06′31″N 77°32′23″E / 11.10861°N 77.53972°E / 11.10861; 77.53972ஆள்கூற்று: 11°06′31″N 77°32′23″E / 11.10861°N 77.53972°E / 11.10861; 77.53972
நிலை Decommissioned
திறந்தது 1992
அணையும் வழிகாலும்
Impounds நொய்யல் ஆறு
உயரம் 21.7 m (71 ft)
நீளம் 2,290 m (7,510 ft)
வழிகால் அளவு 2,527 m3/s (89,200 cu ft/s)
நீர்த்தேக்கம்
மொத்தம் capacity 17,480 m3 (14.17 acre⋅ft)
மேற்பரப்பு area 2.2 km2 (0.85 sq mi)[1]

நொய்யல் ஒரத்துப்பாளையம் அல்லது ஒரத்துப்பாளையம் அணை என்பது நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும். இது 1992 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இதன் பாசனபரப்பு 10,000 ஏக்கருக்கு மேற்பட்டதாகும், இவை திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ளன. இவ்வணை காங்கேயத்திற்கும் சென்னிமலைக்கும் இடையில் உள்ளது. காங்கேயத்திலிருந்து வடக்கே 16 கிமீ தொலைவிலும் திருப்பூரிலிருந்து கிழக்கே 26 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

கட்டப்பட்டு முதல் 5 ஆண்டுகளுக்கே விவசாயத்திற்குப் பயன்பட்டது, பின் திருப்பூர் பின்னலாடை சாய கழிவுகள் தேங்கும் குட்டையாகவே பயன்பட்டது [2]. இதனால் நீர்ப்பாசனத்திற்கு நொய்யல் ஆற்றையும் இந்த அணையையும் சார்ந்திருந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிடுவதையே நிறுத்தி விட்டனர்.

சாயக் கழிவு நீர்க் குளமாக இந்த அணை மாறிப்போனதால், இதைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் வாழும் மக்களின் நலனும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தகைய கிராமங்களுள் சென்னிமலை, ஊத்துக்குளி போன்றவை அடங்கும். தொல்லியல் அகழ்வாய்வுக் களமான கொடுமணல் கிராமமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "India: National Register of Large Dams 2009". Central Water Commission. பார்த்த நாள் 22 November 2011.
  2. http://articles.timesofindia.indiatimes.com/2012-02-07/madurai/31033758_1_noyyal-river-farmers-tirupur

வெளி இணைப்புகள்[தொகு]