ஆரணியாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆரணி ஆறு (Arani River) கிருஷ்ணா ஆற்றின் கிளையாறாக திருவள்ளூர் மாவட்டம் போன்ற வடதமிழகத்தில் பாயும் ஆறாகும். கிருஷ்ணா ஆறு ஊத்துக்கோட்டையின் வழியாக தமிழ்நாட்டினுள் நுழைந்து கொடுதலை ஆறு மற்றும் ஆரணி ஆறு என்று இரண்டாகப் பிரிகிறது. கொடுதலை ஆற்றுநீர் சோழவரம் ஏரியில் சேமிக்கப்பட்டு கோடைகாலத்தில் சென்னையின் குடிநீராக பயன்படுத்தப்பட்டு, மீதமுள்ள தண்ணீர் காரனோடை பாலம், நாபாளத்து பாலம் வழியாக வங்கக்கடலில் சென்று கலக்கிறது.

ஆரணி ஆறு பெரியபாளையம், பொன்னேரி, பெரும்பேடு வழியாகச் சென்று பழவேற்காடு அருகே வங்கக்கடலில் கலக்கிறது. பொன்னேரி அடுத்துள்ள ஆலாடு எனும் இடத்தில் ஆரணி ஆற்றின் குறுக்காக அணை கட்டி தண்ணீரை சேமித்து சுற்றிலுமுள்ள விவசாயிகளின் பாசனத்திற்கு பயன்படுத்துகின்றனர். புனித ஆறாகவும் கருதப்படும் இவ்வாற்றின் கரையில் உள்ள பெரியபாளையத்திலுள்ள ரேணுகாதேவி பவானி அம்மன் கோயிலும், பாபஹரேஸ்வரர் கோயிலும், பொன்னேரி சிவன் கோயிலும் பிரசித்தி பெற்ற கோயில்களாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரணியாறு&oldid=2582404" இருந்து மீள்விக்கப்பட்டது