பெருமாள் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெருமாள் ஏரி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நன்னீர் ஏரி ஆகும்.குறிஞ்சிப்பாடிக்கு 10 கிலோ மீட்டர் தொலைவில் பெருமாள் ஏரி அமைந்துள்ளது.

கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் பெருமாள் ஏரி அமைந்துள்ளது. இது 12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் பராந்தக சோழன் என்ற மன்னனால் உருவாக்கப்பட்டது. இதன் நீளம் 16 கிலோமீட்டர். அகலம் 1 கிலோமீட்டர். ஏற்கனவே நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் கழிவுகளால் 8 கிலோமீட்டர் தூரம் ஏரி தூர்ந்து விட்டது. தமிழக அரசு கடலூர் சிப்காட்டில் புதிதாக அமைந்து வரும் 3000 கோடி ரூபாய் திட்டமான நாகார்ஜுனா ரிபைனரீஸ் என்ற ஆந்திரா நிறுவனத்திற்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள பெருமாள் ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது[1]. மேலும் அந்த ஏரியில் ராட்சச ஆழ் குழாய் மூலமும் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. கடலூர் செய்தி தளத்திலிருந்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமாள்_ஏரி&oldid=2808164" இருந்து மீள்விக்கப்பட்டது