உள்ளடக்கத்துக்குச் செல்

அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி
Alagappa College of Technology
வகைஅண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகம்
உருவாக்கம்1944(சென்னைப்பல்கலைக்கழகம்), 1974(அண்ணா பல்கலைக்கழகம்)
அமைவிடம், ,
இணையதளம்http://www.annauniv.edu/act/index.htm

அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி என்பது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னால் அங்கக்கல்லூரி (Constituent College) தற்போதைய கல்லூரி வளாகமும் ஆகும். இதை அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி எனவும் அதன் ஆங்கில பெயர் சுருக்கத்தைக் கொண்டு ஏ.சி.டெக் (Alagappa College of Technology) எனவும் அழைப்பர். இதன் முந்தைய பெயர் அழகப்ப செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி. அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே இதை ஏ.சி.டெக் என்றே குறிப்பிடுவது வழக்கம். ஆனால் இதன் பழைய சுருக்கமான ஏ.சி.காலேஜ் என்னும் பெயர் இன்னும் பரவலாய் அறியப்படும் ஒன்று.[1][2][3]

சென்னைப்பல்கலைக்கழக்கத்தில் இருந்து அண்ணா பலகலைக்கழகம் உருவாக்குவதற்கு முற்பட்ட காலமான 1974க்கு முன்னர், அழகப்ப செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னரே அப்போதைய ஒருங்கிணைந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டது.

தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகச் சீர்திருத்தத்தில் நான்கு அங்கக்கல்லூரிகளும் அங்கக்கல்லூரி என்ற நிலையை இழந்து அவை நான்கு பல்கலைக்கழக வளாகங்கள்(University Campus) என அழைக்கப்படுகின்றன. எனவே அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி தற்போது அழகப்பர் தொழிநுட்ப கல்லூரி வளாகம்(A.C.Tech Campus) என அழைக்கப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் அழகப்பர் கல்லூரி வளாகத்தில் வேதிப்பொறியியல், உயிரித்தொழில்நுட்பம், தோல் தொழினுட்பம், பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ-ரசாயன தொழில்நுட்பம், உணவுத் தொழில்நுட்பம், மருந்துத் தொழில்நுட்பம்,துணித் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலைத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகள் வழங்கப் பெறுகின்றன்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Department of Chemical Engineering
  2. "Engagements / Chennai : In Chennai Today". தி இந்து. 2007-02-24. Archived from the original on 2007-02-26. பார்க்கப்பட்ட நாள் 2012-01-28.
  3. "Tamil Nadu / Chennai News : "Industrial boom will die if chemical engineers opt out of their field"". தி இந்து. 2008-02-21. Archived from the original on 2008-02-27. பார்க்கப்பட்ட நாள் 2012-01-28.