நாரத கான சபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாரத கான சபா (Narada Gana Sabha) தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை ஆழ்வார் பேட்டையில் இயங்கும் புகழ் பெற்ற இயல், இசை, நாடக மன்றங்களில் ஒன்றாகும். நாரத கான சபாவில் ஆண்டுதோறும் மார்கழி மாத இசைப் பெருவிழாக்கள் நடைபெறுவது சிறப்பாகும். [1]

வரலாறு[தொகு]

நாரத கான சபா, சென்னை நகரத்தின் மைலாப்பூர் பகுதியில் உள்ள வி. எம். தெருவில் 9 பிப்ரவரி 1958ல் நிறுவப்பட்டது.[2] பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து வித்வத் சபையின் அரங்கத்திற்கு, நாரத கான சபா இடம் மாற்றப்பட்டது.[2] 1972ல் பிப்ரவரி 1988ல், சென்னை, டி. டி. கிருஷ்ணமாச்சாரி சாலையில் (டி.டி.கே சாலை) சபாவின் பெயரில் நிலம் வாங்கி, அதில் கட்டிடம் கட்டிக் கொண்டு நாரத கான சபா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.[2]

நிகழ்ச்சிகள்[தொகு]

நாரத கான சபா கர்நாடக இசை, இந்தியப் பாரம்பரிய நாட்டியங்கள் மற்றும் நாடகங்களை நடத்துவதுடன், ஆன்மீக மற்றும் சமயச் சொற்பொழிவுகளும் நடத்துகிறது. [3] இம்மன்றத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சியின் போது இயல், இசை, நாடகங்களை நடத்தி கலைஞர்களை ஊக்கிவிக்கிறது.[4]

நாட்டிய அரங்கம்[தொகு]

நாரத கான சபா இந்தியப் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் வகையில் நாட்டிய அரங்கம் எனும் தனிப்பிரிவு செப்டம்பர், 1995 முதல் இயக்குகிறது. [5]

அடிக்குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரத_கான_சபா&oldid=2727473" இருந்து மீள்விக்கப்பட்டது