நன்மங்கலம் வன பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நன்மங்கலம் வனப் பகுதி சென்னையில் வேளச்சேரி-தாம்பரம் இடையே உள்ள மேடவாக்கத்தில் தாம்பரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. நன்மங்கலம் வனப் பகுதியின் மொத்த பரப்பளவு 2,400 ஹெக்டேர் ஆகும். இதில் 320 ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.[1]

சிவப்பு ஆள்காட்டி மூக்கு உடைய நீர் பறவை

பறவை ஆராய்ச்சி ஆர்வலர்களிடையே பரவலாக அறியப்பட்ட இக்காடு 85 க்கும் மேற்பட்ட பறவை இனங்களின் புகலிடமாய் விளங்குகிறது. மேலும் பல அரிய வகைப் பறவைகளும் இங்கு வந்து செல்வதாக ஓர் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.[2]

நகர்ப்புறத்தில் அமைந்துள்ள இந்தப் பாதுகாக்கப்பட்ட காடு ஒரு கைவிடப்பட்ட கல் குவாரி இடமாகும்.[3]

மாநில வனத்துறை இந்தச் சிறிய காட்டுப் பகுதியில் தரவு சேகரிப்புப் பொறுப்பை கேர் இந்தியா என்ற அமைப்பிடம் ஒப்படைத்துள்ளது. எனினும் விரைவாக வளரும் குடியிருப்புப் பகுதிகளின்அருகில் அமைந்துள்ளதால் அத்துமீறல் மற்றும் ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்க இங்கு வேலி அமைக்கப்பட வேண்டும் என்பது பொது ஆர்வலர்களின் கருத்து.

ஆதாரங்கள்[தொகு]

  1. "After 14 years, encroachments in Nanmangalam reserve forest removed". The Times of India (Chennai: The Times Group). 30 July 2009. Archived from the original on 2012-09-27. https://web.archive.org/web/20120927050956/http://articles.timesofindia.indiatimes.com/2009-07-30/chennai/28183139_1_forest-officials-reserve-forest-encroachments. பார்த்த நாள்: 6-Jan-2012. 
  2. "A forest in the urban jungle". The Hindu (Chennai: The Hindu). http://www.hinduonnet.com/thehindu/mp/2007/11/28/stories/2007112850460100.htm. 
  3. Padmanabhan, Geeta (9 January 2012). "Chennai's eco spots". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/life-and-style/leisure/article2787737.ece. பார்த்த நாள்: 9-Jan-2012. 


ஆள்கூறுகள்: 12°55′35″N 80°10′31″E / 12.926268°N 80.175176°E / 12.926268; 80.175176

"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்மங்கலம்_வன_பகுதி&oldid=3217916" இருந்து மீள்விக்கப்பட்டது