மத்திய கைலாசம் சந்திப்பு

ஆள்கூறுகள்: 13°00′24″N 80°14′50″E / 13.006654°N 80.247263°E / 13.006654; 80.247263
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்திய கைலாசம் சந்திப்பு
தமிழ் நாடு சாலை மேம்பாட்டு நுறுவனம் நிராகரித்த வரைபடம்
அமைவிடம்
சென்னை, இந்தியா
ஆள்கூறுகள்:13°00′24″N 80°14′50″E / 13.006654°N 80.247263°E / 13.006654; 80.247263
சந்தியில் உள்ள
சாலைகள்:
ராஜீவ் காந்தி சாலை
சர்தார் பட்டேல் சாலை
கட்டுமானம்
வழித்தடங்கள்:6
அமைக்கப்பட்ட நாள்:Originally proposed for 2007

மத்திய கைலாசம் சந்திப்பு (Madhya Kailash Junction) இது தென் சென்னையின் முக்கியப் பகுதியான மத்திய கைலாசம் என்ற கோவில் எல்லையிலும், ராஜீவ் காந்தி சாலையின் துவக்கத்திலும் அமைந்திருக்கும் சந்திப்பாகும். மேலும் அடையாறையும் கிண்டியையும் இணைக்கும் சாலையான சர்தார் பட்டேல் சாலையிலிருந்து பிரியும் இடத்தில் அமைந்துள்ளது.

மத்திய கைலாசம் பிரிவு[தொகு]

2007 ஆண்டு தமிழக உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் [1] தலைமையில் வள்ளலார் நகர் சந்திப்பு, பேசின் பாலம் சந்திப்பு, எல்.பி சாலை - திருவான்மியூர் சந்திப்பு மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை சந்திப்பு போன்றவை கட்ட வரைபடம் பரிந்துரைக்கப்பட்டது. [2] இச்சந்திப்புகளைக் கட்டிமுடிக்க 2 ஆண்டுகள் கணக்கிட்டு 2009 ஆம் ஆண்டு முடிக்கப்படும் என்று கூறப்பட்டது. [3] ஆனால் இதனை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் துறை இடைமாற்றுச்சந்திப்பைக் காத்திருப்பு நிலைக்குத் தள்ளியதால் இன்னமும் கட்டப்படவில்லை.[4]

அரசின் இயலாமை[தொகு]

- தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் துறை பரிந்துரைக்கிறது... மத்திய நெடுஞ்சாலைத் துறை நிராகரிக்கிறது... அரசு இன்னமும் துரிதப்படுத்தவில்லை.

அருகில்[தொகு]

சென்னை மெரினாவைலிருந்து [5] 9 கி.மீற்றர்கள் தொலைவிலும், பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலிருந்து [6] 5.3 கி.மீற்றர்கள் தொலைவிலும், பெரியார் அறிவியல் ஆராய்ச்சி மையத்திலிருந்து [7] 1.6 கி.மீற்றர்கள் தொலைவிலும் இந்த சந்திப்பு அமைந்துள்ளது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]