சென்னை மாநகர பரப்பு


சென்னை மாநகர பரப்பு, இந்தியாவின் 4-வது பெரிய மாநகர பரப்பாகும். மக்கள் தொகை அடிப்படையில், உலகின் 34 -வது பெரிய பரப்பாக "சென்னை மாநகர பரப்பு" திகழ்கிறது. சென்னை மாநகர பரப்பானது, சென்னை மாநகராட்சிப்பகுதிகள் மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளை உள்ளடக்கியதாக அமையும். இந்த மாநகர பரப்பு பகுதியின் நகர வளர்ச்சித்திட்டங்கள், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தால் செயல்படுத்தப்படுகிறது.
உள்ளடக்கம்
[தொகு]சென்னை மாநகர பரப்பு 3 மாவட்டங்களை உள்ளடக்கி மொத்தம் 1172 சதுர கீ. மீ. பரப்பளவு கொண்டதாக அமைந்துள்ளது.
Sn | மாவட்டம் | பரப்பளவு (ச. கீ. மீ -யில்)()[1] | மக்கள் தொகை (2001) |
---|---|---|---|
1 | சென்னை மாவட்டம் (சென்னை மாநகரம் ) | 176 | 4,343,645 |
2 | திருவள்ளூர் மாவட்டம் | 637 | 1,574,847 |
3 | காஞ்சிபுரம் மாவட்டம் | 376 | 1,107,789 |
மொத்தம் | 1189 | 7,026,281 |
நகர வளர்ச்சியில் பங்கு பெரும் அமைப்புகள்
[தொகு]Sn | அமைப்புகள் | கடமைகள் |
---|---|---|
1 | சென்னை மாநகராட்சி, நகராட்சிகள் and பஞ்சாயத்துகள் | தத்தம் பகுதிகளில் குடி ஆளுமை செய்தல் |
2 | தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் | மனைகள் மற்றும் கட்டிய வீடுகளை வழங்குதல், மனை மற்றும் இருப்பிடம் சார்ந்த சேவை செய்தல் |
3 | மாநகர போக்குவரத்து கழகம் | பேருந்து போக்குவரத்து |
4 | தென்னக இருப்புவழி | சென்னை புறநகர் இருப்புவழி, சென்னை மெட்ரோ சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம் |
5 | சென்னை நகர போக்குவரத்து காவல் | போக்குவரத்து மேலாண்மை திட்டங்கள் |
6 | தமிழ்நாடு மின்சார வாரியம் | மின்சாரம் தயாரிப்பு மற்றும் விநியோகம் |
7 | பொதுப்பணி துறை | நிலத்தடி சாக்கடைத்திட்ட ஆக்கம் மற்றும் பராமரிப்பு |
8 | சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் | நகர கட்டுமான திட்டமிடல்கள், பல்வேறு கட்டுமானப்பணிகளின் ஒருங்கிணைப்பு |
9 | சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம் | சென்னை மாநகர பரப்பின் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவு நீரகற்றம் |
10 | தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் | சேரிப்பகுதிகளில் நல்ல இருப்பிட வசதி, கட்டமைப்பு மற்றும் அங்கு வாழ்பவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் |
விளக்கம்
[தொகு]தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரம், இந்தியாவின் நான்காவது பெரிய மாநகரமாகும். சென்னை மாநகர பரப்பானது, சென்னை மாநகராட்சி பகுதிகள், 16 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் மற்றும் 214 ஊராட்சிகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. சென்னை மாநகர பரப்பின் மொத்த பரப்பளவு 1189 ச கீ.மீ ஆகும்.
சென்னை மாநகர பரப்பு தமிழ்நாட்டின் 3 மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடிக்கி அமைந்துள்ளது. அவை சென்னை மாநகராட்சிப்பகுதி, திருவள்ளூர் மாவட்டத்தின் ஓர் பகுதி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். திருவள்ளூர் மாவட்டத்தின் மொத்த பரப்பளவான 3427 ச கி. மீ -இல் 637 ச கி. மீ - உம் (அம்பத்தூர், திருவள்ளூர், பொன்னேரி மற்றும் பூவிருந்தவல்லி வட்டத்திற்குட்பட்ட பகுதிகள்) , காஞ்சிபுரம் மாவட்டத்தின் மொத்த பரப்பளவான 4433 ச கி. மீ - இல் 376 -உம் (தாம்பரம், திருப்பெரும்புதூர் மற்றும் செங்கல்பட்டு வட்டத்திற்குட்பட்ட பகுதிகள்) ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "CHENNAI METROPOLITAN AREA - PROFILE". Chennai Metropolitan Development Authority. Archived from the original on 2007-09-27. Retrieved 2007-10-05.
வெளியிணைப்புகள்
[தொகு]