குலசேகரம்
குலசேகரம் Kulasekaram | |
---|---|
ஆள்கூறுகள்: 8°21′49″N 77°17′55″E / 8.3637°N 77.2985°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி மாவட்டம் |
ஏற்றம் | 122 m (400 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 629161 |
வாகனப் பதிவு | TN 75 yy xxxx |
அருகிலுள்ள ஊர்கள் | திருநந்திக்கரை, பேச்சிப்பாறை, அருமனை, திற்பரப்பு மற்றும் திருவட்டாறு |
மாவட்ட ஆட்சித் தலைவர் | ஆர்.அழகுமீனா, இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | பத்மனாபபுரம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி உறுப்பினர் | விஜய் வசந்த் |
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் | மனோ தங்கராஜ் |
குலசேகரம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
மார்த்தாண்டத்திற்கு அடுத்து இம்மாவட்டத்தில் மிக முக்கியமான வணிக மையங்களில் இதுவும் ஒன்றாகும். குலசேகரத்திற்குள் ஒட்டுமொத்த பண பரிமாற்றம் 25 மில்லியனுக்கும் மேலானது என்று கருதப்படுகிறது. குலசேகரத்தில் பல ரப்பர் தோட்டங்கள் உள்ளன; அங்கு உயர்ந்த தரம் கொண்ட ரப்பர் மரங்கள் விளைகின்றன. இது நகரின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 122 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குலசேகரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 8°21′49″N 77°17′55″E / 8.3637°N 77.2985°E ஆகும்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற மகாவிஷ்ணு கோயில்[2] மற்றும் சாஸ்தா கோயில்[3] ஆகியவை குலசேகரம் பகுதியில் அமைந்துள்ளன. மேலும், அச்சாலீசுவரர் கோயில் குலசேகரத்தில் அமையப் பெற்றுள்ளது.
சொற்பிறப்பு
[தொகு]குலசேகரம் என்பது கேரளாவைச் சார்ந்த ஒரு வம்சத்தின் பெயராகும், அதன் பெயர் பெறப்பட்டிருக்கலாம்.
நிர்வாகம்
[தொகு]குலசேகரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகர பஞ்சாயத்து ஆகும். பஞ்சாயத்தில் 18 வார்டுகள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளின் வளர்ச்சிக்கு பொறுப்பாளிகள். வடிகால் வசதி, உள்ளூர் சாலைகள் மற்றும் நீர் வசதி ஆகியவற்றை பராமரிக்கின்றனா்.
பாதுகாப்பு
[தொகு]காவல் நிலையம்
[தொகு]குலசேகரம் காவல் நிலையம் அரசுமூட்டில் அமைந்துள்ளது.
தீ கட்டுப்பாடு
[தொகு]தீ கட்டுப்பாட்டு நிலையம் ஈஞ்சக்கோடு எனும் பகுதியில் அமைந்துள்ளது.
சுற்றுலா
[தொகு]கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கிடையேயான முக்கிய இடமாக இது விளங்குகிறது. திற்பரப்பு, மாத்தூர் தொட்டிபாலம், பேச்சிப்பாறை அணை, பெருஞ்சாணி நீர்த்தேக்கம் மற்றும் கோதையாறு அணை. திற்பரப்பு நீர்வீழ்ச்சிகளும், பேச்சிப்பாறை அணைகளும் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களாகும். கோதையாறு பகுதியில் ஒரு நீர்மின்சார நிலையம் உள்ளது அது அடர்ந்த காட்டு பகுதியில் அமைந்துள்ளது.
கல்வி
[தொகு]குறிப்பாக மருத்துவ ஆய்வுகளில்.தமிழ்நாட்டின் கல்வி வரைபடத்தில் குலசேகரம் முக்கிய இடம் வகிக்கிறது, மூன்று மருத்துவக் கல்லூரிகள், நான்கு செவிலியா் பயிற்சி மருத்துவ கல்லூரிகள் மற்றும் பிற கல்லூரிகள் மற்றும் பள்ளிகளும் இந்த நகரில் அமைந்துள்ளது.
மருத்துவ கல்லூரிகள்
[தொகு]- ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி, இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல்
- ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ அறிவியல் நிறுவனம் (SMIMS)
- சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி
பல் மருத்துவ கல்லூரிகள்
[தொகு]- ஸ்ரீ மூகாம்பிகா இன்ஸ்டிடியூட் ஆப் டென்டல் சயின்சஸ்
கலை & அறிவியல்
[தொகு]- ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வியியல் கல்லூரி
குலசேகரத்தில் 20 க்கும் மேற்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன இவை பல்வேறு நிலைகளில் கல்வியை அளிக்கின்றன..
- ↑ "Kulasekaram Population Census 2011". census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2017-05-02.
- ↑ "Arulmigu Mahavishnu Temple, Nandhimangalam, Kulasekharam - 629161, Kanyakumari District [TM038585].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-09.
- ↑ "Arulmigu Sastha Temple, Puthiyakavu, Kulasekharam - 629177, Kanyakumari District [TM038798].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-09.