உள்ளடக்கத்துக்குச் செல்

பூதப்பாண்டி

ஆள்கூறுகள்: 8°15′51″N 77°26′45″E / 8.264100°N 77.445800°E / 8.264100; 77.445800
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூதபாண்டி
—  பேரூராட்சி  —
பூதபாண்டி
இருப்பிடம்: பூதபாண்டி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°15′51″N 77°26′45″E / 8.264100°N 77.445800°E / 8.264100; 77.445800
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

15,931 (2011)

3,540/km2 (9,169/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

4.5 சதுர கிலோமீட்டர்கள் (1.7 sq mi)

55 மீட்டர்கள் (180 அடி)

இணையதளம் www.townpanchayat.in/boothapandy


பூதபாண்டி (ஆங்கிலம்:Boothapandi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும். இங்கு பூதலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் திருக்கோவில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதம் இக்கோயிலில் தேரோட்ட திருவிழா நடைபெறும்.

அமைவிடம்

[தொகு]

கன்னியாகுமரியிலிருந்து 27 கிமீ தொலைவில் உள்ள இப்பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம் 13 கிமீ தொலைவில் உள்ள நாகர்கோவில் ஆகும்.

இதன் கிழக்கில் ஆரல்வாய்மொழி 10 கிமீ ; மேற்கில் தக்கலை 20 கிமீ; வடக்கில் அழகியபாண்டியபுரம் 8 கிமீ; தெற்கில் நாகர்கோவில் 10 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

4.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 51 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4280 வீடுகளும், 15931 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5] [6]

சிறப்புகள்

[தொகு]

பூதபாண்டி தாடகை மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. நாகர்கோவில் - பாலமோர் சாலையில், நாகர்கோவிலிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இது பூதபாண்டியன் என்ற பாண்டிய மன்னர் தோற்றுவித்த தொன்மையான ஊராகும். பழையாறு ஆற்றின் கரையில் மிக அருமையான இயற்கைச் சூழலில் இவ்வூர் அமைந்துள்ளது. தொல்பொருள் ஆய்வில் முக்கியம் வாய்ந்த ஊர். இங்குள்ள ஆலயத்தின் தெய்வத்தின் பெயர் அருள்மிகு பூதலிங்கம் ஆகும். ஆண்டுத் தேர்த் திருவிழா சிறப்பான நிகழ்வாகும்.

புகழ் பெற்றவர்கள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. பேரூராட்சியின் இணையதளம்
  4. பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Boothapandi Population Census 2011
  6. BoothapandiTown Panchayat


"https://ta.wikipedia.org/w/index.php?title=பூதப்பாண்டி&oldid=3755121" இலிருந்து மீள்விக்கப்பட்டது