உள்ளடக்கத்துக்குச் செல்

நாகராஜா கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகராஜா கோயிலின் நுழைவாயில்

நாகராஜா கோவில் என்பது கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் புறநகர்ப் பகுதியில் உள்ளது. இக்கோயிலின் பெயரிலேயே ஊர் நாகர்கோவில் என்றழைக்கப்படுகிறது. இது கேரள பாரம்பரியக் கோவில் ஆகும். இங்கு மூலஸ்தானத்தில் ஐந்துதலை நாகராஜர் அருள்பாலிக்கிறார். இந்த கோவிலைச் சுற்றி ஏராளமான பாம்புச் சிலைகள் உள்ளன. பொதுமக்கள் ஆவணிமாதத்தில் இச்சிலைகளுக்குப் பாலூற்றி அபிஷேகம் செய்வதை சிறப்பாகக் கருதுகின்றனர்.[1]

இக்கோவிலின் கருவறையின் மேல் ஓலை வேயப்பட்டு உள்ளது. இது வேறு எந்தக் கோவிலிலும் பார்க்கமுடியாத சிறப்பு அம்சமாகும். அது மட்டுமல்ல இந்தக் கோவிலின் கருவறை மண் ஆறு மாதம் கருப்பாகவும் ஆறு மாதம் வெண்மையாகவும் காணப்படுகிறது. இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. [2]

இக்கோவிலில் அருள்பாலிக்கும் பாலமுருகனுக்கு ஆண்டு தோறும் சஷ்டி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சூரன் பாடும் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. NAGARAJA TEMPLE - NAGERCOIL - A GREAT PLACE TO WORSHIP FOR JAINS & HINDUS.
  2. அருள் மிகு நாகராஜ சுவாமி திருக்கோயில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகராஜா_கோவில்&oldid=3789694" இலிருந்து மீள்விக்கப்பட்டது