இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு
பாகோடு இயேசுவின் திரு இருதய ஆலயம் மார்த்தாண்டம், பாகோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் பழமையான கோவில் ஆகும். இக்கோவிலானது 1933 இல் துவங்கப்பட்டது.
வரலாறு
[தொகு]கிபி 1930 ஆம் ஆண்டு கொல்லம் மறை மாவட்டத்திலிருந்து பிரிந்து கோட்டார் மறை மாவட்டம் உதயமான காலத்தில், பாகோடு பகுதியில் உள்ள சிலரின் முயற்சியால், இப்பகுதியில் கத்தோலிக்க திருச்சபை வளரத் தொடங்கியது. 1933 ஆம் ஆண்டு திரித்துவபுரம் பங்குத்தந்தை அருட்பணி தனிஸ்லாஸ் மரியா தலைமையில் பங்கின் சிலரின் துணையுடன் மறைபரப்புப் பணி தீவிரமடைந்தது.[1]
1937 இல் ஆயர் மேதகு லாரன்ஸ் அவர்கள் கோட்டார் ஆயராக இருந்த போது [2] மாதிக்காவிளை என்ற இடத்தில் ஓலைக் கொட்டகை அமைக்கப்பட்டு, திரித்துவபுரத்தின் கிளைப் பங்கு என்ற தகுதியைப் பெற்றது. பின்னர் இவ்வாலயம் தற்போதைய ஆலயத்தின் வடக்குப் பகுதிக்கு மாற்றப்பட்டு பொற்றை கோயில் என மக்களால் அழைக்கப்பட்டது.
குருகுல முதல்வர் அருட்பணி வின்சென்ட் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நிறுவப்பட்டு 1939 ஆம் ஆண்டு ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, புதிய ஆயர் T. R ஆஞ்ஞிசாமியால் அர்ச்சிக்கப்பட்டது.
குழித்துறை மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்
[தொகு]- ↑ "110 இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு". ஆலயம் அறிவோம்-church.catholictamil.com. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2021.
- ↑ https://en.wikipedia.org/wiki/Roman_Catholic_Diocese_of_Kuzhithurai