எம். ஆர். காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம். ஆர். காந்தி
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2 மே 2021
முன்னவர் என். சுரேஷ்ராஜன்
தொகுதி நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி
துணைத்தலைவர், பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு
பதவியில்
2016 - 2020
தனிநபர் தகவல்
பிறப்பு மாவிலை இராமசாமி காந்தி
1945 (அகவை 75–76)[1]
கீழமாவிலை, தெற்கு சூரங்குடி, இராஜாக்கமங்கலம் ஊராட்சி, கன்னியாகுமரி
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதீய ஜனதா கட்சி
பிற அரசியல்
சார்புகள்
பாரதீய ஜனசங்கம்
பட்டப்பெயர்(கள்) குட்டி காமராஜ்

மாவிளை இராமசாமி நாடார் காந்தி (Mavilai Ramasamy Nadar Gandhi) தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து வென்று தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2][3] இவர் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவராக 2016 முதல் 2020 முடிய பதவி வகித்தவர். இவர் இந்துத்துவா இயக்கத்திற்காக திருமணம் செய்து கொள்ளாதவர்.

அரசியல் வரலாறு[தொகு]

எம். ஆர். காந்தி 25 ஆண்டுகளுக்கு பின் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக, தமிழக சட்டமன்றத்திற்கு செல்கிறார்.[4] 2021 சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் முதல் முறையாக பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.ஆர்.காந்தி 88 ஆயிரத்து 804 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த படியாக திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன், 77 ஆயிரத்து 135 வாக்குகள் பெற்றுள்ளார். [5]

நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம். ஆர். காந்தி தெற்கு சூரங்குடி, கீழமாவிலை, இராஜாக்கமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்தவர். இவருக்கு 75 வயதாகிறது. 1967-இல் பாரதிய ஜனசங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டத் தலைவராக இருந்தார்.

1968 முதல் 1970 வரை ஜன சங்க கட்சியின் தென் மண்டல அமைப்பாளராகவும், 1970 முதல் 1975 வரை ஜனசங்க மாநில செயலாளராகவும் இருந்துள்ளார். 1975-இல் மிசா கால கட்டத்தில் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தவர். 1980-இல் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புக்குழு உறுப்பினராகவும், 1981 முதல் 1986 வரை பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளராகவும், 1986 முதல் 1992 வரை மாநில பொது செயலாளராகவும், 2000-ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவராகவும், 2001 முதல் 2006 வரை மாவட்ட ஊராட்சி உறுப்பினராகவும், 2017 முதல் 2020 வரை பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவராகவும், 2020 முதல் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக உள்ளார்.

தேர்தல் வரலாறு[தொகு]

எம். ஆர். காந்தி 1980-இல் நாகர்கோவில் தொகுதி, 1984-இல் குளச்சல் தொகுதி, 2006-இல் குளச்சல் தொகுதி, 2011-இல் கன்னியாகுமரி தொகுதி, 2016-இல் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது நடைபெற்ற 2021 சட்டமன்ற தேர்தலில் 6வது முறையாக நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் 1989-இல் நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பெற்றார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஆர்._காந்தி&oldid=3145576" இருந்து மீள்விக்கப்பட்டது