உள்ளடக்கத்துக்குச் செல்

வேளாண்மை அறிவியல் நிலையம், திருப்பதிசாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
KVK office
வேளாண்மை அறிவியல் நிலைய அலுவலகக் கட்டிடம்

திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் நிலையம் (Krishi Vigyan Kendra (KVK), Thirupalthisaram) கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் நிதி உதவியுடன் 2004ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு முன்னால் இது பேச்சிப்பாறையில் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் அமைந்த இடத்தில் இருந்தது. தற்போது இது வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் திருப்பதிசாரத்தின் வளாகத்தின் அன்மையில் மாற்றப்பட்டது. இதில் சுமார் 7 முதல் 10 விஞ்ஞானிகள் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காகப் பணிபுரிகின்றனர். இந்த வேளாண்மை அறிவியல் நிலையதின் பணிகளாக விவசாயிகளுக்கு பல்வேறு விவசாயத் தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிக்க களப்பயிற்சி, காலத்திற்கேற்ப பூச்சி, நோய் கட்டுப்பாட்டு முறைகள், உழவியல் முறைகள், செம்மை நெல் சாகுபடி குறிப்புகள், பழ வகை சாகுபடி, மலர் சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு ஆகியன பற்றி செயல் விளக்கங்கள் ஆகிய செயல்கள் செய்யப்படுகின்றன. மேலும் விவசாயத் துறைகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]