துவாக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துவாக்குடி
துவாக்குடி
இருப்பிடம்: துவாக்குடி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°27′N 78°29′E / 10.45°N 78.48°E / 10.45; 78.48ஆள்கூறுகள்: 10°27′N 78°29′E / 10.45°N 78.48°E / 10.45; 78.48
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
வட்டம் திருவெறும்பூர் வட்டம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
நகராட்சி தலைவர் இ.காயாம்பு
மக்கள் தொகை 21,460 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

துவாக்குடி (ஆங்கிலம்:Thuvakudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளியின் கூட்டுப் புறநகர் பகுதியில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 9,402 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 38,887 ஆகும். அதில் 21,112 ஆண்களும், 17,775 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 89% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 842 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3261 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, பெண் குழந்தைகள் 956 வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 6,835 மற்றும் 386 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 83.68%, இசுலாமியர்கள் 5.05%, கிறித்தவர்கள் 10.8% மற்றும் பிறர் 0.48% ஆகவுள்ளனர்.[3]

இவ்வூரின் சிறப்பு[தொகு]

இவ்வூர் முற்காலத்தில் துழாய்க்குடி என்றழைக்கப்பட்டு, பின்னர் மருவி துவாக்குடி என்றழைக்கப் படுகிறது. இவ்வூரில் உள்ள சோழீசுவரர் கோவில் கல்வெட்டுகளின் மூலம் இத்தகவல் அறியப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கான தேசிய தொழில்நுட்பக் கழகம் துவாக்குடியில் அமைந்துள்ளது.

அருகில் அமைந்துள்ள ஊர்[தொகு]

திருவெறும்பூர்

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. துவாக்குடி நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=துவாக்குடி&oldid=3031883" இருந்து மீள்விக்கப்பட்டது