உள்ளடக்கத்துக்குச் செல்

திருவெறும்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவெறும்பூர்
மாநகர் புறநகர்
திருவெறும்பூர் is located in Tiruchirapalli
திருவெறும்பூர்
திருவெறும்பூர்
ஆள்கூறுகள்: 10°47′06.4″N 78°46′30.0″E / 10.785111°N 78.775000°E / 10.785111; 78.775000
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
ஏற்றம்
119 m (390 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்16,835
நேர வலயம்ஒசநே+5.30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுTN-81, TN-45 (பழைய எண்)

திருவெறும்பூர் (Thiruverumbur) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி அருகிலுள்ள ஒரு நகராட்சி ஆகும். இது 2011-ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[1] திருஎறும்பூர் என்பது திரிந்து திருவெறும்பூர் என மாறியது. இங்கு அமைந்துள்ள திரு எறும்பீஸ்வரர் கோயிலின் புராணப் பெயர் காரணமாக இந்நகருக்கு இப்பெயர் ஏற்பட்டது. திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[2]

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,835 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருவெறும்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவெறும்பூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

போக்குவரத்து

[தொகு]

திருவெறும்பூரில் தொடர்வண்டி நிலையம் உள்ளது. இங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், வேளாங்கண்ணி, காரைக்கால், மைசூர், மயிலாடுதுறை, ஆகிய ஊர்களுக்கு தொடர்வண்டிகள் உள்ளன.

முக்கிய இடங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tiruchi Corporation begins delimitation survey". 31 August 2017. https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/tiruchi-corporation-begins-delimitation-survey/article19592362.ece. 
  2. "திருச்சி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1226805-trichy-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 5 October 2025. 
  3. "மக்கள் தொகை". web.archive.org. Archived from the original on 2004-06-16. Retrieved 2022-10-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவெறும்பூர்&oldid=4433718" இலிருந்து மீள்விக்கப்பட்டது