கோரையாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோரையாறு என்பது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறு ஆகும். காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்றான வெண்ணாற்றில் இருந்து நீடாமங்கலத்திற்கு வடமேற்கில் 2.5 கி.மீ இல் மூனாறு தலைப்பு என்ற இடத்தில் மூன்று ஆறுகள் பிரிகிறது. அவையாவன வெண்ணாறு, பாமினி ஆறு, கோரையாறு ஆகும். கோரையறு அங்கிருந்து தொடங்கி முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் அருகே வங்க கடலில் கலக்கிறது. இதன் மொத்த நீளம் 80 கி.மீ ஆகும். இந்த ஆறு நீடாமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய வட்டங்களில் உழவு தொழில் நடக்க முக்கிய காரணமாகிறது.

இந்த ஆறு கடலோடு கலக்கும் முகத்துவாரத்தில் அலையாத்தி காடுகள் அமைந்துள்ளது. கடலிலிருந்து கடும் வேகத்துடன் வீசும் அலையின் வேகத்தை, காற்றின் வேகத்தைக் குறைத்து, கட்டுப்படுத்துவதால்தான் இந்தக் காடுகளை அலையாத்திக் காடுகள் என்று மக்கள் அழைக்கிறார்கள்.

2004ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய போதும், 2008ஆம் ஆண்டு நிஷா புயல் தாக்கியபோதும், முத்துப்பேட்டை கடற்பகுதியில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரையாறு&oldid=2533837" இருந்து மீள்விக்கப்பட்டது