கொள்ளிடம் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கொள்ளிடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொள்ளிடம் ஆறு

கொள்ளிடம் ஆறு (பிரித்தானிய ஆட்சிக்கால ஆங்கிலம்: Coleroon) தமிழ்நாட்டில் ஓடும் காவிரி ஆற்றின் துணை ஆறு ஆகும்.

ஆற்றின் போக்கு[தொகு]

திருச்சி அருகே திருவரங்கம் தீவில் மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் தஞ்சை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களுக்கு இடையே கிழக்கு முகமாக ஓடி ஆயங்குடி, முட்டம் வழியே பரங்கிப் பேட்டைக்கு 5 கி.மீ. தெற்கில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

கொள்ளிடம் ஆற்றின் கரையில் சிதம்பரம்[தொகு]

கொள்ளிடம், காவிரியின் வெள்ள வடிகாலாக பயன்படுகிறது.[1]. சிதம்பரம் நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.

வரலாற்று காலத்தில் ஏற்பட்ட வெள்ளம்[தொகு]

ரானி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் கொள்ளிடம் ஆற்றில் பெரு வெள்ளம் ஏற்பட்டதாகவும் அதனால் மக்கள் துன்புற்று நின்றபோது மங்கம்மாளின் திறமையான ஆட்சியால் மக்கள் காப்பாற்றப்பட்டதாகவும் வரலாறு குறிப்பிடுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. பொதுப்பணித்துறை,கடலூர்
  2. 9th தமிழ் புத்தகம்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொள்ளிடம்_ஆறு&oldid=2112752" இருந்து மீள்விக்கப்பட்டது